தூர்தர்ஷன் தன்னுடைய புதிய லோகோவை தேர்வு செய்யும் வகையில் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
உலகில் உள்ள பெரிய ஒளிபரப்பு நிறுவனங்களுள் தூர்தர்ஷனும் ஒன்று. இந்திய அரசின் பொது ஒளிபரப்பு சேவை நிறுவனமான பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் தூர்தர்ஷன் இயங்கி வருகிறது . இந்த நிலையில், தூர்தர்ஷன் தன்னுடைய லோகோவை மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக, புதிய லோகோவை தேர்வு செய்யும் வகையில் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.
முன்னதாக, தூர்தர்ஷன் மட்டுமே தொலைக்காட்சி சேனலாக இருந்த காலகட்டத்தில், இந்த லோகோவானது மக்களின் கவனத்தை ஈர்த்து வந்தது. நாளடைவில் தனியார் தொலைக்காட்சியின் வருகையினால், இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த லோகோ இருக்க வேண்டும் என தூர்தர்ஷன் இந்த போட்டியை நடத்துகிறது.
இந்த லோகாவானது புதிய இந்தியாவின் நோக்கத்தையும், தூர்தர்ஷனின் நிறுவனத்தை சார்ந்த வகையிலும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் போட்டியில் இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ள முடியும்.
ஒரு நபரிடம் அல்லது நிறுவனத்திடம் இருந்து ஒரே ஒரு லோகோ மட்டுமே சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும்.
இந்திய காப்புரிமை சட்டம் 1957-ன் எந்த வித விதிகளையும் மீறும் வகையில் இருக்கக் கூடாது.
தூர்தர்ஷன்/பிரசார் பாரதி/ தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்த போட்டியில் பங்கேற்க முடியாது.
இப்போட்டியில் வெற்றிபெருவோருக்கு, ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும என தெரிவிக்கப்பட்டுளளது. புதிய லோகோவை சமர்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 14-ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு அரசு இணையதளத்தைக் காணலாம்: