Advertisment

டெல்லி சேவைகள் அவசர சட்டம் மக்களவையில் நிறைவேற்றம்: அமித் ஷா பரபரப்பு பேச்சு

டெல்லி யூனியன் தேசிய தலைநகர் திருத்தம் மசோதா 2023 மீதான விவாதத்தின் போது யூனியன் பிரதேசங்களில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என அமித் ஷா கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lok Sabha passes Bill to replace Delhi services ordinance

டெல்லி யூனியன் தேசிய தலைநகர் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவை வியாழக்கிழமை (ஆக.3) நிறைவேறியது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்த விவாதத்தைத் தொடர்ந்து, டெல்லி யூனியன் தேசிய தலைநகர் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவை வியாழக்கிழமை (ஆக.3) நிறைவேறியது.

டெல்லி சேவைகள் அவசரச் சட்டத்தை மாற்றும் மசோதா மீதான விவாதத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, யூனியன் பிரதேசங்களில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்றார்.

Advertisment

மேலும், விதிகளை உருவாக்குவதற்கும் உரிமை உண்டு என்று கூறினார். மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம் உள்ளிட்டவைகளில் இந்த மசோதா மத்திய அரசு அதிகாரம் வழங்கும் எனத் தெரிகிறது.

முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை தாக்கிய ஷா, இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, எதிர்க்கட்சிகளின் கூட்டணி உடைந்துவிடும் என்று கூறினார்.

கடந்த மாதம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து அவையில் நிறைவேற்றப்பட்ட மற்ற ஒன்பது மசோதாக்கள் மீதான விவாதங்களில் எதிர்க்கட்சி கூட்டணி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், மணிப்பூர் வன்முறை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த ஷா, "அனைத்து பதில்களையும் அரசாங்கம் வழங்கும், இந்த பிரச்சினைக்கு நான் சபையில் பதிலளிப்பேன்" என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Amit Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment