பிரதமர் மோடியின் மூன்று நாள் அமெரிக்க பயணமானது இன்று தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக அமெரிக்காவின் முக்கிய சிஇஒக்கள் 20 பேரிடம் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஒ டிம் குக், வால்மார்ட் நிறுவனத்தின் சிஇஒ டக் மெமில்லான், கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர்பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்ய நாதல்லா ஆகியோர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் விர்ஜினியாவில் புறநகர் பகுதியில் அமெரிக்கவாழ் இந்திய சமுதாயத்தினர் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார்.
திங்கட்கிழமை மதியம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கிறார். இருதரப்பு உறவு குறித்தான பேச்சுவார்த்தை, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரம் தொடர்பான ஆலோசனைக்கு இருநாட்டு தலைவர்களும் சுமார் 5 மணிநேரம் செலவிடுகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி அமெரிக்கா புறப்படுவதற்கு முன் , ஜூன் 25 காலை 11 மணிக்கு மன் கி பாத்.,ல் உரையாற்றுவேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, ஜூன் மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று (ஜூன் 25) வழக்கம் போல் மன் கி பாத் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் மற்றும் மோடி ஆப் ஆகியவற்றில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது. யூட்யூப்பிலும் இந்நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
மோடி ஆப்ஸ் அல்லது 1922 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தோ தங்களின் கேள்விகள் மற்றும் கருத்துக்களை பதிவு செய்யலாம்.