scorecardresearch

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவை விரிவாக்கம்; சிந்தியா ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை பாஜக பதவி நீக்கம் செய்து கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் 16 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 12 முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 28 புதிய உறுப்பினர்களைச் சேர்த்து தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 12 காங்கிரஸ் தலைவர்களில் ஜோதிராதித்ய சிந்தியாவின் விசுவாசிகள் 9 பேர் உள்ளனர். இவர்களுடைய அதிருப்தி காரணமாக 15 மாதங்களாக இருந்து வந்த […]

Madhya Pradesh cabinet expansion, Madhya Pradesh cabinet members, மத்தியப் பிரதேசம், சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவை விரிவாக்கம், பாஜக, காங்கிரஸ், ஜோதிராதித்ய சிந்தியா, Madhya Pradesh cabinet full list, Shivraj Singh Chouhan, Madhya Pradesh cabinet scindia
Madhya Pradesh cabinet expansion, Madhya Pradesh cabinet members, மத்தியப் பிரதேசம், சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவை விரிவாக்கம், பாஜக, காங்கிரஸ், ஜோதிராதித்ய சிந்தியா, Madhya Pradesh cabinet full list, Shivraj Singh Chouhan, Madhya Pradesh cabinet scindia
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை பாஜக பதவி நீக்கம் செய்து கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் 16 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 12 முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 28 புதிய உறுப்பினர்களைச் சேர்த்து தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார்.

அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 12 காங்கிரஸ் தலைவர்களில் ஜோதிராதித்ய சிந்தியாவின் விசுவாசிகள் 9 பேர் உள்ளனர். இவர்களுடைய அதிருப்தி காரணமாக 15 மாதங்களாக இருந்து வந்த கமல்நாத் அரசாங்கம் மார்ச் மாதம் வீழ்ந்தது. இதில் 2 சிந்தியா விசுவாசிகள் ஏற்கனவே சிவராஜ் சிங் சவுகான் அணியின் ஒரு பகுதியாக இருந்தனர்.

மொத்தத்தில், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசின் வீழ்ச்சியை உறுதி செய்வதற்காக பெங்களூரில் முகாமிட்ட 22 முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் 14 பேர் இப்போது அமைச்சர்களாக உள்ளனர். அவர்களில் 10 பேர் அமைச்சரவையிலும் நான்கு பேர் மாநில அமைச்சர்களாகவும் உள்ளனர்.

சிந்தியாவின் விசுவாசிகளான டாக்டர் பிரபுராம் சவுத்ரி, இமார்டி தேவி, பிரதிமன் சிங் தோமர் மற்றும் மகேந்திர சிங் சிசோடியா ஆகிய 4 பேரும் கமல்நாத் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தனர். ஏப்ரல் 21ம் தேதி அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட துளசிராம் சிலாவத் மற்றும் கோவிந்த் ராஜ்புத் ஆகியோரும் காங்கிரஸ் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தனர்.

கோபால் பார்கவா, பூபேந்திர சிங், விஜய் ஷா, ஜெகதீஷ் தேவதா, யசோதரா ராஜே சிந்தியா, விஸ்வாஸ் சரங் ஆகியோர் வியாழக்கிழமை அமைச்சரவையில் இடம் பிடித்த பாஜக தலைவர்கள் ஆவர். இவர்கள் சிவராஜ் சிங் சவுகானின் முந்தைய அரசாங்கங்களில் அமைச்சர்களாக இருந்தனர். எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் தீவிர பங்கு வகித்த அரவிந்த் படோரியா, உஷா தாக்கூர் மற்றும் மோகன் யாதவ் உட்பட பல புதியவர்களும் இருந்தனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிஷாஹுலால் சிங், மீண்டும் தனது விசுவாசத்தை மாற்றுவதற்கு முன்பு பெங்களூரிலிருந்து திரும்பிய பின்னர் மீண்டும் அவர் காங்கிரஸ் முகாமில் சேர்ந்தார். ஐடல் சிங் கன்சனா மற்றும் ஹர்தீப் சிங் டாங் ஆகியோர் சிந்தியா விசுவாசிகள் அல்ல என்றாலும் அவர்கள் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் கிளர்ச்ச்யில் இணைந்தனர்.

சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் இப்போது 34 அமைச்சர்கள் உள்ளனர், மேலும் விரிவாக்கத்திற்கு அதிக வாய்ப்பில்லை. 100 நாட்கள் நிறைவடைந்த பாஜக அரசின் ஸ்திரத்தன்மையை தீர்மானிக்கும் வகையில் 24 இடங்களுக்கான முக்கியமான இடைத்தேர்தலால் இந்த விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த இடங்கள் பெரும்பாலானவை குவாலியர்-சம்பல் பிராந்தியத்தில் வருகின்றன. அங்கே ஜோதிர் ஆதித்யா சிந்தியா செல்வாக்கு செலுத்துகிறார். 22 முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் 14 பேர் இடைத்தேர்தல்களை அமைச்சர்களாக எதிர்கொள்ள உள்ளார்கள்.

பிரதமர் நாடு முழுவது பொதுமுடக்கம் அறிவித்ததற்கு முந்தைய நாள் மார்ச் 23ம் தேதி சிவராஜ் சிங் சவுகான் தனியாக மத்தியப் பிரதேச முதல்வராக பதவியேற்றார். ஏப்ரல் 21ம் தேதி வரை தனியாக பணியாற்றிய அவர், பின்னர், சிந்தியாவின் இரண்டு விசுவாசிகள் உட்பட ஐந்து அமைச்சர்களை அவர் சேர்த்தார்.

கடந்த சில நாட்களாக புது டெல்லி மற்றும் போபாலில் யார் யாரை அமைச்சரவையில் சேர்ப்பார்கள் என்று பரபரப்பான விவாதங்கள் நடந்தன. ஏனெனில் பாஜக தலைவர்களை சரிசெய்ய முயற்சிப்பதில் கட்சி ஒரு இறுக்கமான நடவடிகையை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

கடந்த காலங்களில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மற்றும் சிந்தியாவின் ஆதரவாளர்களாக உள்ளவர்கள் உட்பட அவர்கள் விரைவில் இடைத்தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர்.

முந்தைய கமல்நாத் அரசாங்கத்தில் இருந்த 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த பின்னர், அவர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜகவில் சேர்ந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Madhya pradesh cm shivraj singh chouhan expands cabinet jyotiraditya scindia

Best of Express