Advertisment

எந்த குடும்பத்திலும் இந்த நிலை வரக்கூடாது; சித்தப்பா சரத் பவாருக்கு எதிராக அஜித் பவார் பேசியது என்ன?

தனது சித்தாந்தத்திற்கு துரோகம் செய்ததாக சரத் பவாரின் கருத்துக்கு பதிலளித்த அஜித் பவார், சரத் பவாரும் பல சமயங்களில் பா.ஜ.க.வுடன் கைகோர்க்க பேச்சுவார்த்தைகளை தொடங்கினார், என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
Mumbai

Ajit Pawar at the party meeting in Mumbai on Wednesday. (PTI)

மகாராஷ்டிர துணை முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் அஜித் பவார் தனது சித்தப்பா ஷரத் பவாரை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தனது பிரிவை உண்மையான NCP ஆக அங்கீகரிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு (EC) கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக அஜித் அனந்தராவ் பவாரை தேர்வு செய்து, சட்டமன்ற மற்றும் நிறுவனப் பிரிவைச் சேர்ந்த பெரும்பான்மையான NCP உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட ஜூன் 30, 2023 தேதியிட்ட ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரபுல் படேல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் என்.சி.பி. சட்டமன்றக் கட்சியின் தலைவராக அஜித் பவாரை நியமிக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது, மேலும் என்.சி.பி. எம்எல்ஏக்களில் பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் அந்த முடிவு அங்கீகரிக்கப்பட்டது, என்று புதன் கிழமையன்று அஜித் பவார் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் பவார் மற்றும் சரத் பவார் இருவரும் ஜூலை 2 அன்று என்சிபியில் பிளவுக்குப் பிறகு முதல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் புதன்கிழமை தனித்தனி சந்திப்புகளை நடத்தினர்.

கட்சியின் 53 எம்எல்ஏக்களில் குறைந்தபட்சம் 29 பேர் அஜித் பவார் கூட்டத்தில் இருந்தனர்.

அவருக்கான விசுவாசத்தை உறுதிப்படுத்தும் பிரமாண பத்திரங்களில் கையெழுத்திட்டனர், 16 எம்எல்ஏக்கள் சரத் பவார் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அஜித் பவாருக்கு ஆதரவாக என்.சி.பி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களிடமிருந்து ஜூன் 30 தேதியிட்ட சுமார் 40 பிரமாணப் பத்திரங்களையும் தேர்தல் குழு புதன்கிழமை பெற்றதாக பிடிஐ அறிக்கை தெரிவித்துள்ளது.

என்.சி.பி. தலைவராக அஜித் பவார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தேதியிடப்படாத தீர்மானமும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

1968 ஆம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் (முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு) ஆணையின் 15 வது பிரிவின் கீழ் அஜித் பவார் தேர்தல் ஆணையத்திற்கு மனுவை அனுப்பினார், இது தேர்தல் ஆணையத்தின், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிளவுபட்ட குழுக்கள் அல்லது போட்டி பிரிவுகள் தொடர்பான அதிகாரம் பற்றியது.

மறுபுறம், ஷரத் பவார் அணி தேர்தல் ஆணையத்திடம் கேவியேட் மனு தாக்கல் செய்துள்ளது, எந்தவொரு உத்தரவையும் நிறைவேற்றும் முன் அதை முதலில் கேட்குமாறு வலியுறுத்தியுள்ளது.

ஜூலை 3 தேதியிட்ட இந்த மின்னஞ்சலை என்.சி.பி.யின் மகாராஷ்டிரா தலைவர் ஜெயந்த் பாட்டீல் அனுப்பியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்ற ஒன்பது எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாட்டீல் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தார்.

அஜித் பவார் குழுவின் அறிக்கையில், தலைவர் பதவி உட்பட என்.சி.பி.யின் முழு கட்டமைப்பும் குறைபாடுடையது, ஏனெனில் கட்சி அரசியலமைப்பின் விதிகளின்படி நியமனங்கள் எதுவும் செய்யப்படவில்லை. தலைவர் உட்பட எந்த ஒரு பதவிக்கும் தேர்தல் நடைமுறை பின்பற்றப்படவில்லை, என்று அது கூறியது.

சட்டமன்றக் கட்சித் தலைவர் அல்லது தலைமைக் கொறடா யார்  என்ற போட்டி சர்ச்சைகளை எதிர்கொள்ளும் போது, சபாநாயகர் அரசியல் கட்சியின் விதிகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் சுதந்திரமான விசாரணையை நடத்த வேண்டும்.

தற்போதைய வழக்கிலும், இரு பிரிவினரும் தாக்கல் செய்த தகுதி நீக்க மனுக்களும், சட்டமன்றக் கட்சித் தலைவர் மற்றும் தலைமைக் கொறடா ஆகியோரின் கோரிக்கைகளும் உள்ளன.

இது சபாநாயகரின் பிரத்யேக அதிகார எல்லைக்குள் உள்ளது.

அத்தகைய முடிவு எடுக்கப்படாவிட்டால், அவர் என்.சி.பி.யின் கொறடாவாக சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கருதி அக்கட்சியைச் சேர்ந்த எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, என்று அது கூறியது.

இதற்கிடையில், கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொழிலாளர்களிடம் பேசிய அஜித் பவார், சரத் பவாரை ஓய்வு பெறச் சொன்னார். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்கும் அவர் உரிமை கோரினார்.

கட்சியின் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், சரத் ​​பவாரின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூட, என்.சி.பி. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக அவர் கூறினார்.

ஒவ்வொரு தொழிலிலும், ஒரு ஓய்வு வயது உள்ளது, அது அதிகாரத்துவமாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி. பாஜகவில் ஓய்வு பெறும் வயது 75, எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றோரின் உதாரணங்களைச் சொல்லலாம்.

புதிய தலைமுறை வருகிறது, உங்கள் ஆசீர்வாதங்களை எங்களுக்கு வழங்க வேண்டும். நான் சில தவறுகள் செய்தால், என்னிடம் சொல்லுங்கள், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன், அதை சரிசெய்து முன்னேறுவேன். நீங்கள் இப்போது 83 வருடங்களைக் கடந்துவிட்டீர்கள், என்றாவது ஒரு நாள் நிறுத்தப் போகிறீர்களா இல்லையா, என்று அவர் கூறினார்.

நான் சுப்ரியாவிடம் (சுலே) பேசினேன். நான் அவரை சமாதானப்படுத்துமாறு அவளிடம் சொன்னேன். ஆனால் அவர் பிடிவாதமானவர் என்றும், யாருடைய பேச்சையும் கேட்பதில்லை என்றும் கூறினாள். என்ன பிடிவாதம் இது? எனக்கு உங்கள் மீது அபரிமிதமான மரியாதை இருக்கிறது, ஆனால் அதை நிறுத்த வேண்டும், என்று அவர் கூறினார்.

முதல்வராக விரும்புவதாகக் கூறிய அஜித் பவார், ‘நான் ஐந்து முறை துணை முதல்வராக இருந்தேன். இது ஒரு சாதனைதான்... ஆனால் நான் துணை முதல்வராக மட்டுமே சிக்கிக்கொண்டேன். நானும் மாநிலத்தை வழிநடத்தி முதல்வராக இருக்க விரும்புகிறேன்... வறுமை அதிகரித்துள்ளதையும், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதையும் என்னால் பார்க்க முடிகிறது. அரசாங்கத்தில் இருந்து கொண்டே இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இதை செய்ய முடியாது.

நான் சரத் பவாரின் மகன் இல்லை என்பதற்காக எனக்கு பதவி உயர்வு இல்லையா? இது போன்ற செயல்கள் ஏன் எனக்கு எதிராக செய்யப்படுகின்றன? நான் என்ன தவறு செய்தேன்? நான் வேறொருவரின் குடும்பத்தில் பிறந்தது என் தவறா,’ என்று அவர் கூறினார்.

சித்தப்பா தனக்கு எதிராக பேரணி நடத்த வேண்டாம் என்றும் அஜித் பவார் எச்சரித்தார். ’நீங்கள் உங்கள் பேரணிகளைத் தொடங்கினால், நானும் பேரணிகளை நடத்த வேண்டியிருக்கும்… நான் இன்று குறைவாகப் பேசினேன், ஆனால் நாளை, பேரணிகள் நடந்தால், நான் எல்லாவற்றையும் வெளிப்படுத்த வேண்டும். எந்த குடும்பத்திலும் அந்த நிலை வரக்கூடாது,’ என்றார்.

தனது சித்தாந்தத்திற்கு துரோகம் செய்ததாக சரத் பவாரின் கருத்துக்கு பதிலளித்த அஜித் பவார், சரத் பவாரும் பல சமயங்களில் பா.ஜ.க.வுடன் கைகோர்க்க பேச்சுவார்த்தைகளை தொடங்கினார், என்று கூறினார்.

2014 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, என்.சி.பி, சிவசேனா மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட, ஒவ்வொரு கட்சியும் 16 இடங்களில் போட்டியிடும் வகையில் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது.

சில என்.சி.பி தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் பா.ஜ.க பின்னர் பின்வாங்கியது. 2014 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும், NCP ஆரம்பத்தில் பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவை வழங்கியது.

2017-ம் ஆண்டிலும் பாஜகவுடன் இணைந்து செல்ல முயற்சி நடந்தது, ஆனால் பாஜக சிவசேனாவை விட்டு வெளியேற விரும்பவில்லை. சிவசேனா வகுப்புவாத கட்சி என்பதால் அதனுடன் செல்ல மாட்டோம் என எங்கள் தலைவர்கள் கூறியதால் கூட்டணி தோல்வியடைந்தது.

ஆனால் 2019ல் சிவசேனாவுடன் கைகோர்க்கும்படி நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டோம். முன்னதாக, சிவசேனா ஒரு வகுப்புவாத கட்சி என்றார்கள், 2019ல் என்ன மாற்றம் ஏற்பட்டது? என்று அவர் கேட்டார்.

2019-ம் ஆண்டு பாஜக அரசில் இணையுமாறு சித்தப்பாதான் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் பிரபல வர்த்தகர் ஒருவரின் இல்லத்தில் ஐந்து சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் என்சிபி தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவு எடுக்கப்பட்டது மற்றும் நான் (சத்தியப் பிரமாணத்திற்கு) செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

பின்னர், அனைத்தும் பின்வாங்கி, நாங்கள் சிவசேனாவுடன் சென்றோம், என்றார்.

தேசியவாத காங்கிரஸ், கடந்த ஆண்டு பாஜகவுடன் கைகோர்க்க முடிவு செய்ததாகவும், ஆனால் பாஜக தலைவர்களை நேரில் சந்திக்க வேண்டாம் என்று சரத் பவார் கூறியதால் பேச்சுவார்த்தை முன்னேறவில்லை என்றும் அவர் கூறினார்.

நான், பிரபுல் படேல், ஜெயந்த் பாட்டீல் கொண்ட மூன்று பேர் குழுவை அமைக்கச் சொன்னோம், மேலும் பாஜகவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். பாஜக தலைவர்களிடம் தொலைபேசியில் பேசினோம்.

இது போன்ற விஷயங்களை தொலைபேசியில் பேசுவதில்லை என்றும், இந்தூருக்கு வரவேண்டும் என்றும் சொன்னார்கள். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தோம். நாங்கள் சென்றால் ஊடகங்களுக்குத் தெரியவரும் என்று எங்கள் தலைவர் சரத் பவார்அப்போது எங்களிடம் கூறினார்... அதுவரை, ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பு விழா நடைபெறவில்லை.

இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே ஷிண்டேஜி, சிஎம் ஆனார் என்று கூறிய அவர், கட்சியின் அனைத்து எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்தின் நகல் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார்.

சரத் ​​பவார் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பதாக குற்றம் சாட்டிய அவர், நான் ஏன் எப்போதும் மக்கள் முன் வில்லனாக்கப்படுகிறேன்? என் தவறு என்ன?

முதலில் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிறகு ராஜினாமாவை திரும்பப் பெற வேண்டும் என்ற தனது சித்தப்பாவின் சமீபத்திய முடிவு குறித்தும் அஜித் பவார் கேள்வி எழுப்பினார்.

ராஜினாமா செய்துவிட்டு, தான் நிறுவியுள்ள பல்வேறு நிறுவனங்களை கவனிக்க விரும்புவதாக அவர்தான் என்னிடம் கூறினார். நான் உட்பட என்சிபி மூத்த தலைவர்களைக் கொண்ட குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதில் சுப்ரியா சுலேவை கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் அவர் என்னிடம் கூறினார்.

இந்த முன்மொழிவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு, அவர் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார். பிறகு அதைத் திரும்பப் பெற நினைத்திருந்தால், ராஜினாமா செய்வதால் என்ன பயன்  அவர் கேட்டார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment