திறந்த வெளியில் தொழுகை நடத்துவது ஏற்புடையதல்ல என ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக குர்கானில் வெள்ளிக்கிழமை தொழுகை தடைபடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "குருகிராமின் காவல் மற்றும் அரசு நிர்வாகத்தின் ஆணையர்களிடம் இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண உத்தரவிட்டுள்ளோம்.தனது இடங்களில் ஒருவர் பூஜை, தொழுகை என மதச்சடங்குகள் செய்தால் பிரச்சனையில்லை. இந்த நோக்கங்களுக்காக மட்டுமே மத வழிபாட்டு தளங்கள் கட்டப்பட்டுள்ளன.
எனவே, பொது இடங்களில் தொழுகை உள்ளிட்ட எந்த மதசடங்குகளும் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாது" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
குர்கானில் உள்ள PWD ஓய்வு இல்லத்தில் குருகிராம் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (ஜிஎம்டிஏ) கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் முதல்வர் இத்தகைய அறிவ்பபை வெளியிட்டார்.
மேலும் பேசிய அவர், "தொழுகை தொடர்பாக இருசமூகத்தினரிடையே அடிக்கடி ஏற்படும் சண்டை தொடர்பாக காவல்துறையிடம் பேசியுள்ளோம்
தற்போதைய சூழ்நிலையில் திறந்த வெளியில் தொழுகை நடத்துவதை அனுமதிக்க முடியாது. மேலும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான பகுதிகள் மற்றும் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அதை மீட்பதற்கான உதவிகளை அரசு செய்யும்" என்றும் தெரிவித்தார்.
இக்கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரம் முன்பு உள்ளூர்வாசிகளும், இந்துத்துவா ஆதரவு குழுக்களின் உறுப்பினர்களும், செக்டார் 37 காவல் நிலையத்திற்கு வெளியே நமாஸ் தொழுகைக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியை ஆக்கிரமித்தனர்.பின்னர்,ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்ட பிபின் ராவத் மற்றும் பிற பாதுகாப்புப் பணியாளர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கூட்டம் நடத்தப்பட்டது.
இவ்வளவு ஹை டெக் செக்யூரிடி மத்தியலிலும், அந்த குழுவினர் லாரிகள் மற்றும் வாகனங்களை மைதானத்தில் நிறுத்தி, 'ஜெய் ஸ்ரீராம்' மற்றும் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிட்டனர்
இந்த குழுக்கள் ஏற்கனவே இத்தகைய முக்கிய நிகழ்வு குறித்து தொழுகை நடத்தியுள்ளனர். 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலைக் குறிக்கும் வகையில் செக்டார் 37 இல் ஹவன் விழாவும், செக்டார் 12 A இல் கோவர்தன் பூஜையை நடத்திவிட்டு சாணம் பிண்ணாக்குகளை விட்டுவிட்டு செல்வதும், செக்டார் 47ல் பேச்சாளர்கள் மூலம் கிரிக்கெட் விளையாடி பஜனை விளையாடிது குறிப்பிடத்தக்கது.
டெல்லியை ஒட்டியுள்ள தொழில் நகரமாக வளர்ந்திருப்பது குருகிராம். இங்கு பணியாற்றும் பல்வேறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் பல வருடங்களாக தம் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழிகையை பொதுவெளியில் நடத்தி வருகின்றனர்.
குருகிராமில் போதுமான மசூதிகளும் இல்லாமையால் அவர்களுக்கு அதன் மாநகராட்சியால் 126 இடங்களில் தொழுகைக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு இந்துத்துவா அமைப்புகளால் தொடரும் எதிர்ப்பால் அவ்விடங்கள் 18 என்றானது. கடந்த வெள்ளிக்கிழமை,செக்டர் 44 மற்றும் செக்டார் 29ல் உள்ள பூங்காக்களிலும் இந்த குழுக்களால் பிரார்த்தனைகள் தடைபட்டன. வெள்ளிக்கிழமை தொழுகையை சீர்குலைக்க முயன்றதாகக் கூறி அக்டோபர் 29 அன்று பலர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.