Advertisment

மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை: 3 முறை அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்ட கடிதம்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவி 3 முறை கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
May 23 May 29 June 19 Three letters to Manipur officials on violence against women went unnoticed

மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் புகார்களை அனுப்புவது குறித்து கவலை தெரிவித்து மணிப்பூரில் உள்ள அதிகாரிகளுக்கு மூன்று முறை எழுதிய கடிதங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை என்று தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா வெள்ளிக்கிழமை (ஜூலை 21) தெரிவித்தார்.

Advertisment

மணிப்பூரில் இருந்து பெறப்பட்ட புகார்களை மாநில தலைமைச் செயலாளர் வினீத் ஜோஷி மற்றும் டிஜிபி ராஜீவ் சிங் ஆகியோருக்கு மே 23 அன்று அனுப்பியதாக அவர் கூறினார்.

மேலும் மே3ஆம் தேதி நடந்த வன்முறை தொடர்பாக மே 29ஆம் தேதி அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், சானிட்டரி நாப்கின்கள் விநியோகம் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் பாலூட்டும் பெண்களுக்கு சிறப்பு ஏற்பாடு உள்ளிட்ட உணவு, பாதுகாப்பு, தங்குமிடம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதன் மூலம் அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளின் கண்ணியம் மற்றும் அடிப்படை உரிமைகளை மதிப்பது மிகவும் பொருத்தமானது.

கூடுதலாக, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்களுக்கு விரைவான பதிலளிப்பதற்கான ஒரு முறையை உருவாக்க வேண்டும்.

இந்த விஷயத்தின் அவசரத்தையும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் மாநில அரசு உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளித்து, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Manipur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment