தலித் பிரச்சனைகள் குறித்து மாநிலங்களைவில் பேச அனுமதிக்காததை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
பகுஜன் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், முன்னாள் உத்திரபிரதேச மாநில முதலமைச்சருமான மாயாவதி, மாநிலங்களவைவில் உத்திரபிரதேச மாநிலம், ஷரன்பூரில் நிகழ்ந்த தலித் மக்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, தொடர்ந்து பேச மாயாவதிக்கு, துணை சபாநாயகர் குரியன் அனுமதி மறுத்தார்.
இதனால், ஆத்திரம் அடைந்த மாயாவதி, தலித் பிரச்சனை குறித்து பேச அனுமதிக்காவிட்டால், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது” தலித் பிரச்சனை பேசுவதற்கு அனுமதி அளிக்காவிட்டால், தற்போதே எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்” என்று கூறினார். இதத்தொடர்ந்து, மாநிலங்களவையில் இருந்து கோபத்துடள் வெளிநடப்பு செய்தார்.
மாநிலங்களவைவின் வெளியே வந்த மாயாவதி கூறும்போது: “சமூதாயத்தில் நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து மாநிலங்கவையில் பேச முயற்சிக்கும் போது, எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? நலிவடைந்த மக்கள் குறித்து மாநிலங்களவையில் பேச முடியாவிட்டால், எனக்கு அவையில் இருப்பதற்கு எந்த தகுதியும் இல்லை. எனவே தான் நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று கூறினேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மாலைநேரத்தில் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக மாயாவதி அறிவித்துள்ளார்.இது தொடர்பான கடிதத்தை துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். அவரது இந்த முடிவு நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக மாயாவதி மாநிலங்கங்ளவையில் பேசியது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது: “மாயாவதி தெரிவித்துள்ள கருத்தானது சரியானது என்பதோடு மிக முக்கியத்துவம் வாய்தது. பாஜக தலைமையிலான மத்திய அரசு தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் அட்டூழியங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, தலித் மற்றும் சிறுபான்மையின மக்கள் அபாய நிலையில்தான் வாழ்ந்து வருகின்றனர்” என்று கூறினார்.