Advertisment

பெருமைமிகு தருணம்: உலகம் சுற்றவிருக்கும் முதல் பெண்கள் கடற்படை குழுவினரை சந்திப்போம்

இந்திய கடற்படையில் முதல்முறையாக ஆறு பெண் அதிகாரிகள் கொண்ட குழுவினர், ஐ.என்.எஸ்.வி. தாரினி என்ற கப்பலில் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெருமைமிகு தருணம்: உலகம் சுற்றவிருக்கும் முதல் பெண்கள் கடற்படை குழுவினரை சந்திப்போம்

கடற்படையில் பணியாற்ற வேண்டும் என்பது பலருடைய விருப்பம். பல நாடுகளுக்கு கடல் மார்க்கமாகவே பயணம் மேற்கொள்வதற்காகவே பலர் அந்த துறையை தேர்ந்தெடுப்பர். ஆனால், அந்த துறையில் ஆபத்துகள் இல்லாமல் இல்லை. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகள் குறிந்து அறிந்து அவற்றை சமாளிக்க தொழில்நுட்ப ரீதியில் வல்லமை பெற்றிருக்க வேண்டும். கடற்படையில் பெண்கள் பணிபுரிவது அபூர்வமாக இருக்கிறது. இந்த நேரத்தில் நமக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி.

Advertisment

இந்திய கடற்படையில் முதல்முறையாக ஆறு பெண் அதிகாரிகள் கொண்ட குழுவினர், ஐ.என்.எஸ்.வி. தாரினி என்ற கப்பலில் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். ஆகஸ்ட் மாத இறுதியில் கோவாவிலிருந்து தங்கள் பயணத்தை அவர்கள் மேற்கொள்ள உள்ளனர். ஆறுக்கும் மேற்பட்ட கடல் எல்லைகளுக்கு அவர்கள் பயணம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர்கள் பயணம் முடிவடையும்.

இந்த பயணத்தை உத்தரகாண்டை சேர்ந்த வர்த்திகா ஜோஷி (வயது 28) தலைமையேற்று வழிநடத்துகிறார். இவரை தவிர்த்து, ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரதீபா ஜம்வால், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்வாதி, மணிப்பூரை சேர்ந்த விஜயதேவி, தெலங்கானாவை சேர்ந்த ஐஸ்வர்யா, டேராடூனை சேர்ந்த பாயல் குப்தா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஆறு பேர் குறித்தும் தெரிந்துகொள்வோம்.

1. வர்த்திகா ஜோஷி:

லெஃப்டினண்ட் கமாண்டராக பணியாற்றும் வர்த்திகா ஜோஷி, உத்தரகாண்ட் மாநிலம் கர்ஹ்வால் பகுதியை சேர்ந்தவர். ரிஷிகேஷில் சில காலம் வசித்திருக்கிறார். ஏரோஸ்பேஸ் பொறியியல் பட்டதாரி. அதில், கடற்படை கட்டமைப்பு என்ற பிரிவை தேர்ந்தெடுத்து படித்தார். கப்பல்கள் வடிவமைத்தல் மற்றும் அதன் கட்டமைப்பு தொடர்புடைய படிப்பு. 2010-ஆம் ஆண்டு கடற்படையில் சேர்ந்தார். 2012-ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் கட்டமைப்பு பணியில் முதலில் பதவி வகித்தார்.

2. ஐஸ்வர்யா:

ஐஸ்வர்யா ஐதராபாத்தை சேர்ந்தவர். அவரது தந்தை மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிந்தவர். இந்த பணிக்கு இவர் புதியவர். படிக்கும்போதே டி.ஆர்.டி.ஓ-வுடன் இணைந்து

ஏவுகணை கட்டமைப்பில் பணியாற்றியிருக்கிறார்.

3. விஜயதேவி:

மணிப்பூரை சேர்ந்த விஜயதேவி 2014-ஆம் ஆண்டு முதல் இத்துறையில் பணியாற்றுகிறார். இவருக்கு தண்ணீர் என்றாலே பயம். இத்துறையில் சேர்ந்த பிறகுதான் நீச்சல் கற்றுக்கொண்டார். “உலகம் என்பது ஒரு சிறிய இடம். உலகின் புதிரான பகுதி கடலிதான் ஒளிந்துகொண்டிருப்பதை நான் உணர்கிறேன்”, என விஜயதேவி கூறியிருக்கிறார்.

4.பிரதீபா ஜம்வால்:

ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த பிரதீபா, கடற்படைக்கு பணிக்கு சேர்ந்தபோது படித்துக் கொண்டிருந்தார். 2012-ஆம் ஆண்டிலிருந்து இப்பணியில் இருக்கிறார். நீண்ட கடல் மார்க்க பயணங்களுக்கு மிகுந்த பொறுமை வேண்டும் என பிரதீபா தெரிவித்திருக்கிறார்.

5. பாயல் குப்தா:

டேராடூனை சேர்ந்த பாயல் குப்தாவின் குடும்பத்தில் யாரும் பாதுகாப்பு படையில் பணியாற்றியதில்லை. சிறுவயதிலிருந்தே குடியரசு தின அணிவகுப்பில் பாதுகாப்பு படையினரைக் கண்டு இவர் கவரப்பட்டார். அந்த கனவும் அவருக்கு நிஜமானது. இந்த குழுவில் இணைந்த செய்திகேட்டு மிகுந்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவர் பாயல்.

6. ஸ்வாதி:

டேராடூனை சேர்ந்த ஸ்வாதி, குடியரசு தின அணிவகுப்பில் தான் பங்குகொள்ள வேண்டும் என்ற கனவை நிறைவேற்றியிருக்கிறார். இந்த குழுவில் இணைந்த செய்தியால் இவரது மகிழ்ச்சி பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.

Indian Navy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment