டெல்லியில் இன்று நடைபெற்றுவரும் ஜி.எஸ்.டி. மசோதா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகம் சார்பில் நிதியமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார். அப்போது ஜி.எஸ்.டி மசோதாவிற்கு தமிழகம் ஒப்புதல் அளித்தது.
மேலும், கோதுமை, மைதா, கடலை மாவு உட்பட 42 பொருட்களுக்கு வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் முன்வைத்துள்ளார். ஜி.எஸ்.டி. மசோதா விரைவில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.