இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரும், பா.ஜ.க எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான தனது 2 வாக்குமூலங்களையும் மைனர் பெண் வாபஸ் பெற்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மைனர் பெண் உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். மைனர் பெண் காவல்துறை மற்றும் மாஜிஸ்திரேட் முன் அளித்த 2 வாக்குமூலங்களையும் வாபஸ் பெற்றதாக தெரிகிறது.
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 2 வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும், கைது செய்ய வலியுறுத்தியும் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஜ் போகத், சங்கீதா போகத் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்டவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 164வது பிரிவின் கீழ் 17 வயதான அவர் புதிய வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாக்குமூலம் நீதிமன்றத்தின் முன் சாட்சியமாக கருதப்படுகிறது. இந்த வாக்குமூலத்தின் மூலம் குற்றச்சாட்டுகளைத் தொடர முடியுமா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும் என்றும், 164ன் கீழ் எந்த வாக்குமூலத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை விசாரணையில் தெரியவரும்.
இது குறித்து மைனர் பெண்ணின் தந்தையிடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கேட்டதற்கு அவர் பதிலளிக்கவில்லை.
டெல்லி காவல்துறையில் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, மைனர் பெண்ணின் தந்தை கூறுகையில், என் மகள் மிகவும் குழப்பமடைந்துள்ளார். அவரால் இனி நிம்மதியாக இருக்க முடியாது. பிரிஜ் பூஷனின் பாலியல் துன்புறுத்தலால் அவள் மனவேதனை அடைந்துள்ளார் என்றார்.
எஃப்.ஐ.ஆர் பதிவில், சிங் அப்பெண்ணை படம் எடுப்பதாக இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருந்தார் என்றும், தன்னை நோக்கி அழுத்தி, தோளில் பலமாக அழுத்தி, பின் வேண்டுமென்றே அவளது மார்பகங்களை நோக்கி கை உயர்த்தினார் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 10 அன்று, மைனர் பெண் சிங்குக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை விவரிக்கும் தனது முதல் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்தார். எஃப்ஐஆர் படி, சிங் மீது கடுமையான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) சட்டத்தின் 10வது பிரிவு மற்றும் ஐபிசி பிரிவுகள் 354, 354A,354D ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரிவு 34-ன் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
ஐபிபி மைனர் மீதான மோசமான பாலியல் வன்கொடுமைக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மோசமான பாலியல் வன்கொடுமைகளை வரையறுக்கும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9, நம்பிக்கை அல்லது அதிகார நிலையில் உள்ள ஒருவரால் குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றமாகிறது. பிரிவுகள் 9(o) மற்றும் 9(p) மோசமான பாலியல் வன்கொடுமையை வரையறுக்கிறது.
மூத்த வழக்கறிஞர் ரெபேக்கா ஜான் கூறுகையில், " இது எனக்கு ஆச்சரியமில்லை. இதுபோன்ற வழக்குகளில் கைது தாமதம் ஆக்கப்படும் போது புகார்தாரர் அழுத்தத்திற்கு உட்படுகிறார். இந்த வகையான நீண்ட போராட்டங்கள் வேதனையானவை. இதுபோன்ற வழக்குகளில் பெண்கள் வெளியே வரும்போது அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் வேலையையும் பணயம் வைத்து தான் வருகிறார்கள் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“