நவம்பர் 12 இமாச்சலப் பிரதேச தேர்தலுக்கு முன்னதாக சோலனில் நடந்த பேரணியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் ஒரு வெளிப்படையான கருத்தை தெரிவித்தார். பா.ஜ.க வேட்பாளர்களை நினைவில் கொள்ள வேண்டியதில்லை. தாமரையை நினைவில் வையுங்கள். வாக்களிக்கும் போது தாமரை சின்னத்தைப் பார்த்தால், இது பா.ஜ.க, இதுதான் மோடி சின்னம் என
புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தாமரைக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் ஆசிர்வாதமாக நேரடியாக மோடியின் கணக்கில் வந்து சேரும் என்று கூறினார்.
5 ஆண்டுகால ஆட்சியில் கட்சியின் முதல்வர்கள் மக்களிடையே எதிர்ப்பு நிலையை எதிர்கொள்ளும் போது பா.ஜ.க இறுதி தேர்தல் பிரச்சாரத்தை அதிகளவில் நம்பியுள்ளது. மோடி அங்கு வரும்போது, டெல்லியிலிருந்து நமக்காக ஒருவர் இருக்கிறார் என்பதை நினைவூட்டுகிறார். எதிர்ப்புகளை சமாளித்து மக்களிடையே மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவது, அவர்களின் நம்பிக்கையை பெறுவது போன்றவற்றில் பா.ஜ.கவில் இவர்களை தவிர பெரிதும் யாரும் இல்லை.
மோடி பா.ஜ.கவின் முகம்
மோடி பா.ஜ.கவின் முகம் என்றால், மறுபுறம் அமித்ஷா. தேர்தலுக்கு கட்டமைப்பை வழிநடத்துதல், ஒருங்கிணைப்பு மற்றும் ஆற்றலை வழங்குவதற்கான முக்கிய நபராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருக்கிறார். உதாரணமாக, குஜராத்தை எடுத்துக் கொள்ளலாம். அமித்ஷா மாநில பா.ஜ.கவின் விவகாரங்களில் இருந்து விலகி இருந்தார். கட்சியின் தேசிய அளவில் அதிக கவனம் செலுத்துகிறார்.
மாநிலத்தில் கடந்த ஆண்டு, செப்டம்பர் 2021 முதல்வர் மாற்றப்பட்டார். குஜராத் முதல்வராக இருந்த
விஜய் ரூபானிக்கு பதிலாக பூபேந்திர படேல் நியமிக்கப்பட்டார். பதவியேற்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அமித்ஷா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் இதற்கான ஆலோசனையில் பங்கேற்றார்.
கட்சியின் விவகாரங்களை பி. எல் சந்தோஷ் (பொதுச் செயலாளர், அமைப்பு) மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதார அமைச்சராக மோடியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜே.பி. நட்டா (பாஜக தேசியத் தலைவர்), சி.ஆர். பாட்டீல் மற்றும் பூபேந்திர படேல் ஆகியோர் கவனித்து வந்தனர்.
இந்நிலையில், அமித்ஷாவின் ஆதரவாளரான ஜிது வகானிக்கு பதிலாக கடந்த ஜூலை 2020-ம் ஆண்டு குஜராத் பா.ஜ.க தலைவராக பாட்டீல் நியமிக்கப்பட்டார். பாட்டீல், மோடியின் தீவிர விசுவாசியாகக் கருதப்படுகிறார்.
மோடி கவலை
இம்முறை குஜராத் சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கடுமையான போட்டியாளராக கருதப்படுகிறது. இந்தநிலையில் பா.ஜ.க யுக்தி வகுத்தது. அமித்ஷா களமிறங்கியுள்ளார். அக்டோபர் பிற்பகுதியில் இருந்து, கிராமங்கள் முதல் மாவட்டங்கள் வரை பல்வேறு மாநில பா.ஜ.க தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்களை களமிறங்கி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
மோடி மற்றும் அமித்ஷாவின் பெயரில் பா.ஜ.க-வை நாட்டின் அனைத்து மூலைகளிலும் கொண்டு செல்வதற்கான தீவிரமான பிரச்சாரங்கள் மற்றும் திட்டங்கள் இருந்தபோதிலும், கட்சியின் மாநில பிரிவுகள் போராடுகின்றனர் என்பதை இது பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு மாதமும், பா.ஜ.க அலுவலகத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தேசியத் தலைமையிடமிருந்து தங்கள் பகுதிகளில் செய்ய வேண்டியது தொடர்பாக பட்டியல் பெற்று, மக்களிடையே நேரடியாக சென்று மோடி அரசின் "நல்ல பணிகள்" திட்டங்கள் குறித்து தெரிவிக்க கூறுகிறார்கள்.
உத்தரப் பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களிலும் வாக்கு சேகரிப்பு, பிரச்சரத்தில் ஈடுபடுபவராக
யோகி ஆதித்யநாத் இருக்கிறார். அமைப்பு செயல்பாடுகள் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கும் போது, கட்சி எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எம்.பி.க்கள் தங்களை உயர்த்த தவறியதாக மோடி, பல முறை தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாக அறியப்படுகிறது.
இமாச்சல் உட்கட்சி பூசல்
இமாச்சலப் பிரசேத பா.ஜ.க-வில் உள்கட்சி பூசல் நிலவுகிறது. கட்சி உள்ளேயே அதிருப்தி நிலவுகிறது.
அதிருப்தியாளர்களில் ஒருவரான கிரிபால் பர்மாரை மோடி நேரடியாக அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த அழைப்பின் பதிவு வைரலானதை அடுத்து எதிர்க்கட்சிகள் பா.ஜ.கவைத் தாக்கின. ஆனால் கட்சி அதிகாரப்பூர்வமாக இதற்கு பதிலளிக்கவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை. மூத்த பா.ஜ.க தலைவர் ஒருவர் இதற்கு பதிலளித்தார். மோடி நிர்வாகிகளுடன்
நேரடி தொடர்பில் இருப்பதையே இது காட்டுகிறது என்று தெரிவித்தார்.
இவ்வாறான பிரச்சனைகளை கட்சி சந்தித்து வருகிறது. குறிப்பாக பதவிகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில் கட்சிக்குள்ளேயே சில அதிருப்திகள் உருவாகின்றன. இமாச்சல் தேர்தலில் இது
வெளிப்படையாக தெரிந்தது. அடுத்து தேர்தலைச் சந்திக்க உள்ள கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் கட்சி இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என கவலை தெரிவிக்கிறது.
ஆனால், இவற்றிற்கு எல்லாம் பா.ஜ.கவின் முகமாக மோடியும், அமைப்பு நாயகனாக அமித்ஷாவும் இவர்களுக்கு துணையான தலைவராக நட்டாவும் வகுத்த வியூகம் இதுவரை வெற்றி பெற்றுள்ளது, இது கட்சியின் கவலைகளை போக்குகிறது. இதில் எதிர்கட்சியிடமிருந்து உண்மையான எதிர்ப்பு இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.