Advertisment

மும்பையில் மிக கனமழை: வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கடும் எச்சரிக்கை!

மும்பையில் மிக கனமழை

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
மும்பையில் மிக கனமழை: வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கடும் எச்சரிக்கை!

Mumbai Rains

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisment

கேரளாவில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. அது படிப்படியாக தீவிரம் அடைந்து நேற்று மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு கொங்கன், தென்மத்திய மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடா, தெற்கு விதர்பா பகுதிகளை அடைந்தது. அதனால், அங்கு கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை முதல் மும்பையில் மிக கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், "மும்பையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் மும்பை மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இன்றும், நாளையும் மிதமிஞ்சிய அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்குப் பருவ மழை இன்று மும்பை கடல்பகுதியை வந்தடைவதால் பொதுமக்கள் முடிந்த வரை வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சுற்றுலாப் பயணிகளும் வெளியூர்வாசிகளும் கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை மும்பை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பெய்துவரும் மழையால் தாதர், பரேல், பாந்த்ரா, போரிவலி, அந்தேரி உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் வந்த 2 விமானங்கள் அஹமதாபாத் நகருக்கு திருப்பி விடப்பட்டன. மும்பை வரும் அனைத்து ரயில்களும் தாமதமாக வந்துகொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment