இந்தியா, சீனா, பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உலக அளவில் கடல் மட்ட உயர்வு அபாயத்தை எதிர்கொள்கின்றன என்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட உலக வானிலை அமைப்பின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில், “உலகளாவிய கடல் மட்ட உயர்வு மற்றும் தாக்கங்கள் – கடல் மட்ட உயர்வால் அனைத்து கண்டங்களிலும் உள்ள பல பெரிய நகரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறியுள்ளது. ஷாங்காய், டாக்கா, பாங்காக், ஜகார்த்தா, மும்பை, மாபுடோ, லாகோஸ், கெய்ரோ, லண்டன், கோபன்ஹேகன், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், பியூனஸ் அயர்ஸ் மற்றும் சாண்டியாகோ ஆகியவை கடல் மட்டம் உயரும் அபாயத்தை எதிர்கொள்ளும் நகரங்களின் பட்டியலில் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இது ஒரு பெரிய பொருளாதார, சமூக மற்றும் மனித சவால்களை உருவாக்கும். கடல் மட்ட உயர்வு கடலோர விவசாய நிலங்கள், நீர் நிலைகள், உள்கட்டமைப்புகளின் பின்னடைவு மற்றும் மனித உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை அச்சுறுத்துகிறது” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
“சராசரி கடல் மட்ட உயர்வின் தாக்கங்கள் புயல் எழுச்சி மற்றும் அலை மாறுபாடுகளால் அதிகரிக்கப்படுகிறது. நியூயார்க்கில் சாண்டி சூறாவளி மற்றும் மொசாம்பிக்கில் உள்ள இடாய் சூறாவளி நிலச்சரிவின் போது இருந்த சூழ்நிலையைப் போலவே இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“கடல் மட்ட உயர்வு உலக அளவில் ஒரே மாதிரியாக இல்லை; பிராந்திய ரீதியாக மாறுபடும் அதே வேளையில், தொடர்ந்து, வேகமெடுத்து வரும் கடல் மட்ட உயர்வு, கடலோர குடியிருப்புகள், உள்கட்டமைப்பை ஆக்கிரமித்து, தாழ்வான கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளை நீரில் மூழ்கடித்து இழப்பை ஏற்படுத்தும்” என்று இந்த அறிக்கை கூறுகிறது.
“பயன்படுத்தப்படாத பகுதிகளில் நகரமயமாக்கலின் போக்குகள் தொடர்ந்தால், ஆற்றல், நீர், பிற சேவைகள் தடைசெய்யப்பட்டு அதிக சவால்களுடன், தாக்கங்களை அதிகப்படுத்தும்” என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. “காலநிலை மாற்றம் உணவு உற்பத்தி, அணுகல் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில், உணவு பாதுகாப்பு , ஊட்டச்சத்து ஆகியவற்றை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தப்படுவதோடு, வறட்சி, வெள்ளம் மற்றும் வெப்ப அலைகளின் தாக்கம், தீவிர கடல் மட்ட உயர்வு பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உணவு பாதுகாப்பிற்கான அபாயங்களை அதிகரிக்கும்.” என்று தெரிவித்துள்ளது.
உலக வானிலை அமைப்பு குறிப்பிட்டுள்ளபடி, “2020 அளவுகளுடன் ஒப்பிடும்போது உலகளாவிய சராசரி கடல் மட்டம் 0.15 மீட்டர் உயர்ந்தால், 100 ஆண்டுகளில் கடலோர வெள்ளத்திற்கு ஆளாகக்கூடிய மக்கள் தொகை சுமார் 20% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வெளிப்படும் மக்கள்தொகை சராசரி கடல் மட்டத்தில் 0.75- மீட்டர் உயர்வில் இரட்டிப்பாகவும், மக்கள்தொகை மாற்றம் இல்லாமல் 1.4 மீட்டர் உயரும் போது மூன்று மடங்காகவும் அதிகரிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.
“நகர்ப்புற அமைப்புகள் முக்கியமான, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தளங்கள், குறிப்பாக கடற்கரையில் காலநிலை மீள் வளர்ச்சியை செயல்படுத்துகின்றன. கடலோர நகரங்கள் மற்றும் குடியேற்றங்கள் அதிக காலநிலையை எதிர்க்கும் வளர்ச்சியை நோக்கி நகர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. முதலாவதாக, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 11% – 896 மில்லியன் மக்கள் – 2020-ல் தாழ்வான கடற்கரை மண்டலத்திற்குள் வாழ்ந்தனர். இது 2050-க்குள் 1 பில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கும். இந்த மக்களும், அதனுடன் தொடர்புடைய வளர்ச்சி மற்றும் கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளும், கடல் மட்ட உயர்வு உட்பட, அதிகரிக்கும் காலநிலை கூட்டு அபாயங்களை எதிர்கொள்கின்றன” என்று உலக வானிலை அமைப்பு அறிக்கை கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“