Advertisment

'அஞ்சலி செலுத்துவது எங்கள் கடமை' பிபின் ராவத் இறுதி சடங்கு நிகழ்வில் ஒலித்த மக்களின் குரல்

மதியம் 1 மணியளவில், ராவத் வீட்டிற்கு வெளியில் கூடியிருந்த மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிப்பு வெளியானது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

author-image
WebDesk
New Update
'அஞ்சலி செலுத்துவது எங்கள் கடமை' பிபின் ராவத் இறுதி சடங்கு நிகழ்வில் ஒலித்த மக்களின் குரல்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடல்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த தகவலை அறிந்த அவரது சொந்த மாநில உத்தரக்கண்ட் மக்கள், காலை 4 மணிக்கு டெல்லியை நோக்கி புறப்பட்டனர். பிற்பகலில் அவரது வீட்டிற்கு முன்பு மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், அரசியல் தலைவர்களும், மூத்த ராணுவ அதிகாரிகளும், இந்திய தலைமை நீதிபதியும் இறுதி மரியாதை அவருக்கு செலுத்தினர்.

நேரக்குறைவால் வீட்டிற்கு முன்பு திரண்டிருந்த பொதுமக்களால் இறுதி மரியாதை செலுத்த முடியாமல் போனது. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் உடல்கள், பிரார் சதுக்க தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவர்களின் இரண்டு மகள்களும் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர்.

முன்னதாக, புதன்கிழமை விபத்தில் உயிரிழந்த 13 பேரில் ஒருவரான பிரிகேடியர் எல் எஸ் லிடரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. மற்றவர்களுக்கு இறுதிச்சடங்கு நடத்திட, அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.

விமானப்படை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். 

காமராஜ் மார்க்கில் உள்ள ஜெனரல் ராவத்தின் இல்லத்திற்கு, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னதாகவே வந்தனர். அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்ட அமித் ஷா, கனத்த இதயத்துடன் ஜெனரல் பிபின் ராவத் ஜி மற்றும் மதுலிகா ராவத் ஜி ஆகியோருக்கு எனது இறுதி மரியாதையை செலுத்தினேன். ராவத் தைரியம் உருவமாக திகழ்ந்தவர். அவரை இவ்வளவு சீக்கிரம் இழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தாய்நாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பு என்றென்றும் நம் நினைவுகளில் இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

publive-image

தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி கே மிஸ்ரா,அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா ,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மூத்த அரசியல் தலைவர்கள், இந்திய தலைமை நீதிபதி என்.வி ரமணா ஆகியோர் காலை 11 மணி முதல் இறுதி மரியாதை செலுத்த ஒவ்வொருத்தராக வருகை புரிந்தனர்.

பின்னர்,பாஜக தலைவர் ஜேபி நட்டா, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி,ஹரியானா மற்றும் உ.பி முதல்வர்கள் மனோகர் லால் கட்டார் மற்றும் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எஸ் ஜெய்சங்கர், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் (காங்கிரஸ்), கனிமொழி (திமுக),டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,ஜெனரல் எம் எம் நரவனே உட்பட பலர் இறுதி மரியாதை செலுத்தினர்.

அவரது வீட்டிற்கு முன்பு திரண்டிருந்தவர்கள் வரிசையில் நிற்கும் படி அறிவுறுத்திய அதிகாரிகள், பின்னர் நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது வரிசையில் நின்றுகொண்டிருந்த கணக்காளர் ரமேஷ் சந்திரா பேசுகையில், ஜெனரல் ராவத் மகிப்பெரிய ஆளுமை கொண்டவர். அவருக்கு அஞ்சலி செலுத்துவது நமது கடமை" என கூறினார்.

மதியம் 1 மணியளவில், ராவத் வீட்டிற்கு வெளியில் கூடியிருந்த மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிப்பு வெளியானது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து, அங்கிருந்த மக்கள் கூட்டம் குறைய தொடங்கியது. டெல்லியின் "விஐபி கலாச்சாரம்" அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பை மறுத்துவிட்டதாக பலர் குற்றச்சாட்டுகின்றனர்.

publive-image

2 மணிக்குப் பிறகு, ஜெனரல் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் தகனக் கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது, 17 சுற்று குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இறுதி மரியாதையை செலுத்தினர்.

அவரை தொடர்ந்து, ஜெனரல் ராவத்தின் மகள்களான கிருத்திகா மற்றும் தாரிணி ஆகியோர் இறுதி சடங்கு நிகழ்வுகளை செய்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bipin Rawat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment