Advertisment

நாட்டின் சிறந்த கல்வி நிலையங்கள் பட்டியல்: மத்திய அரசு வெளியீடு

நாட்டின் சிறந்த கல்வி நிலையங்களுக்கான பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
நாட்டின் சிறந்த கல்வி நிலையங்கள் பட்டியல்: மத்திய அரசு வெளியீடு

அதில், சிறந்த பொறியியல் கல்வி நிலையங்களுக்கான பட்டியலில் ஐஐடி மெட்ராஸ்க்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதே பட்டியலில் அண்ணா பல்கலைகழகத்திற்கு 8 வது இடம் கிடைத்துள்ளது. வேலூர் தொழில்நுட்ப கல்வி குழுமத்திற்கு 13 வது இடம் கிடைத்துள்ளது. கோவையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரிக்கு 33 வது இடம் கிடைத்துள்ளது. எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்திற்கு 35 வது இடமும், மதுரை தியாகராயர் கல்லூரிக்கு 37 வது இடமும் கிடைத்துள்ளது.

சிறந்த பல்கலைக்கழங்களுக்கான பட்டியலில், பெங்களூரு அறிவியல் கல்வி நிலையம் முதல் இடத்தில் உள்ளது. டெல்லி ஜெ.என்.யு. 2 வது இடத்தில் உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழத்திற்கு 6 வது இடம் கிடைத்துள்ளது. கோவை அமிர்தா பல்கலைக்கழத்திற்கு 9 வது இடமும், வேலூர் தொழில்நுட்பக் கழகத்திற்கு 14 வது இடமும் கிடைத்துள்ளது. கோவை வேளாண் பல்கலைகழகத்திற்கு 20வது இடமும், கோவை பாரதியார் பல்கலைகழகத்திற்கு 28 வது இடமும் கிடைத்துள்ளது. எஸ்.ஆர்.எம். அறிவியம் தொழில்நுட்ப கழகத்திற்கு 34 வது இடம் கிடைத்துள்ளது.

சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில் சென்னை லயோலாவிற்கு இந்தியா அளவில் 2 வது இடம் கிடைத்துள்ளது. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரிக்கு 4 வது இடமும், சென்னை பெண்கள் கிறிஸ்டியன் கல்லூரிக்கு 10வது இடமும், கோவை பிஎஸ்ஜி 11 வது இடமும், காஞ்சீபுரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரிக்கு 12 வது இடமும் கிடைத்துள்ளது.

University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment