நீட் தேர்வு முடிவு வெளியீடு!

நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. cbseresult.nic.in, cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

65 ஆயிரம் எம்.பி.பிஎஸ் மற்றும் 25 ஆயிரம் பி.டி.எஸ் இடங்களுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 7-ம் தேதி நடைபெற்றது. இந்த நீட்தேர்வை 11,38,900 பேர் எழுதினர். முன்னதாக நீட் தேர்வு முடிவை வெளியிட உயர்நீதிமன்ற கிளை தடை விதித்திருந்தது. பின்னர் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த தடையை நீக்கியது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கான முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூன் 22-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின்னர் அந்த அறிவிப்பு திரும்பப்பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளன.

நீட் தேர்வு எழுதிய சுமார் 11.5 லட்சம் மாணவர்களில் 10.5 லட்ச மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எழுதியுள்ளனர். குறிப்பிடும்படியாக 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் மாணவர்கள் மட்டுமே வட்டார மொழிகளில் தேர்வு எழுதியுள்ளனர்.

×Close
×Close