புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம்!

தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள நஜீம் ஜைதியின் பதிவிக்காலம் ஜுலை 6-ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாளை மறுநாள் (ஜுலை 6) அவர் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1975-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். மேலும், இவர் குஜராத்தின் தலைமைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். குஜராத்தின் கன்ட்லா துறைமுகத்தின் நிர்வாக இயக்குனராக 1999-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள நஜீம் ஜைதியின் பதிவிக்காலம் ஜுலை 6-ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close