இந்தியன் முஜாஹிதீன் நிறுவனர் குரேஷி கைது : துப்பாக்கி சண்டை நடத்தி பிடித்ததாக என்.ஐ.ஏ. தகவல்

இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை நிறுவிய அப்துல் சுபன் குரேஷியை இந்திய புலனாய்வுத் துறையினர் டெல்லியில் கைது செய்துள்ளனர்

இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை நிறுவிய அப்துல் சுபன் குரேஷியை இந்திய புலனாய்வுத் துறையினர் டெல்லியில் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து துணை கமிஷ்னர் குஷ்வாஹா அளித்த பேட்டியில், “2008ல் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு திட்டம் தீட்டிக் கொடுத்தவர் அப்துல் சுபன் குரேஷி. மேலும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை நிறுவியவரும் இவர் தான். கடும் துப்பாக்கிச் சண்டையை அடுத்து, குரேஷியை நாங்கள் கைது செய்துள்ளோம். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை மீண்டும் செயல்பட வைக்க குரேஷியை முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில் நாங்கள் அவரை கைது செய்துள்ளோம். போலி ஆவணங்களை தயாரித்து நேபாளில் மறைமுகமாக வாழ்ந்து வந்த குரேஷி, இந்தியா வரும் தகவல் கிடைத்ததையடுத்து கைது செய்தோம்” என்றார்.

மத்தியப் பிரதேசத்தின் ராம்பூரைச் சேர்ந்த குரேஷி, சிமி இயக்கத்தில் இருந்தவர். இந்த சிமி இயக்கம் தான் டெல்லி, பெங்களூரு மற்றும் அகமதாபாத் பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தியது.தேசிய புலனாய்வு அமைப்பின் தேடப்படும் முக்கிய குற்றவாளியாகவும் இவர் அறிவிக்கப்பட்டு இருந்தார். காசிம், சாகிர், கப், தௌகீர் என்ற பல பெயர்களில் குரேஷி வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close