Advertisment

நைஜீரிய குடிமகனை டெல்லியில் கட்டி வைத்து அடித்த கொடூரம்! (வீடியோ)

நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை, டெல்லி மால்வியா நகரில், ஒரு கரண்ட் போஸ்ட்டில் கட்டி வைத்து சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர்

author-image
Anbarasan Gnanamani
Oct 10, 2017 14:36 IST
நைஜீரிய குடிமகனை டெல்லியில் கட்டி வைத்து அடித்த கொடூரம்! (வீடியோ)

நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை, டெல்லி மால்வியா நகரில், ஒரு கரண்ட் போஸ்ட்டில் கட்டி வைத்து சிலர் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி கிருஷ்ண குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இச்சம்பவம் செப்டம்பர் 24-ஆம் தேதி நடந்துள்ளது. அந்த ஆப்பிரிக்க நபரின் பெயர் அஹமத்.

டெல்லி சாவித்ரி நகரில் உள்ள வீடு ஒன்றில் திருடச் சென்றிருக்கிறார். அப்போது தப்பிக்க முற்பட்ட போது, கீழே தவறி விழுந்ததால், அவரால் தப்பிக்க முடியவில்லை. கிருஷ்ண குமார் அந்த ஏரியாவில் வசிக்கும் நபர்.

கிருஷ்ணகுமார் அஹ்மத்தை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு வந்து, "எனது வீட்டில் துளையிட்டு, விலையுயர்ந்த பொருட்களை அஹ்மத் திருட முயன்றார். அப்போது, சத்தம் கேட்டு நான் அவரை துரத்த முயற்சித்தேன். அஹ்மத் தானாகவே கீழே விழுந்து காயம் அடைந்துவிட்டார்" என எங்களிடம் கூறினார்.  அப்போது, தான் தாக்கப்பட்டது குறித்து அஹ்மத் கூறவேயில்லை. அமைதியாக இருந்தார்.

நாங்களும் அஹ்மத் கீழே விழுந்ததால் தான் காயம் அடைந்திருக்கிறார் என நினைத்தோம். ஆனால், இந்த வீடியோ எங்களுக்கு கிடைத்த பின்னரே உண்மை தெரியவந்தது. கிருஷ்ணா கட்டி வைத்து கண்மூடித்தனமாக அஹ்மத்தை தாக்கியது எங்களுக்கு தெரிந்தது.

என்னதான் அஹ்மத் திருடனாக இருந்தாலும், அவரை இவ்வளவு மோசமாக தாக்கியிருப்பதால், கிருஷ்ணா மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#Nigeria #Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment