நாட்டின் பொருளாதாரம் நிலையான பாதையில் செல்கிறது என்று கூறிய மத்திய நிதி அமைச்சர் சீதாராமன், இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது என்றும், பல ஆண்டுகளுக்கு இது தொடரும் என்றும் கூறினார்.
7 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வருமான வரி தள்ளுபடி வழங்குவதன் மூலம் புதிய வரி முறை, அதிக செலவழிக்கக்கூடிய வருமானத்தை மக்களின் கைகளில் விட்டுச் செல்லும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
2023-24 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நிதி நிர்வாகத்தின் வரம்புகளுக்குள் வளர்ச்சி கட்டாயத் தேவையை துல்லியமாக சமநிலைப்படுத்துகிறது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
பொருளாதாரம் நிலையான பாதையில் இருப்பதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகத் இந்தியா திகழ்கிறது. வரும் ஆண்டுகளில் அது தொடரும் என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறிய சில கருத்துகளுக்கு தலைவர் ஜகதீப் சிங் தன்கர் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர்களை மாநிலங்களவைத் தலைவர் தனது அறைக்கு அழைத்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் ஒழுங்கைப் பராமரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவரிடம் வலியுறுத்தினார்.
ராஜ்யச பாவில் வெள்ளிக்கிழமை காலை அமளிக்கு மத்தியில், அவை நடவடிக்கைகளின் போது செய்யப்படும் ஒவ்வொரு மீறலையும் ஆழ்ந்து பரிசீலிப்பதாக ஜெக்தீப் தன்கர் கூறினார்.
“இரு தரப்பிலிருந்தும் வரும் ஒவ்வொரு மீறலுக்கும் எனது ஆழ்ந்த எதிர்வினை இல்லாமல் போகாது” என்று ஜெக்தீப் தன்கர் கூறினார். இதனிடையே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் கடுமையான பேச்சுக்கு, ஒரு நாள் கழித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் தன்னை மட்டுமே புகழ்ந்து கொண்டதாகவும், அதானி-ஹிண்டன்பர்க் பிரச்னை அல்லது பணவீக்கம் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என்றும் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”