scorecardresearch

பீகார் முதல்வராக நிதிஷ், துணை முதல்வராக சுஷில் மோடி பதவியேற்றனர்!!

பிகார் மாநில முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக சுஷில் குமார் மோடியும் பதவியேற்றனர். அவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பீகார் முதல்வராக நிதிஷ், துணை முதல்வராக சுஷில் மோடி பதவியேற்றனர்!!

பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக சுஷில் குமார் மோடியும் பதவியேற்றனர். அவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ரயில்வே துறை அமைச்சராக, ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு இருந்தபோது கடந்த 2006-ஆம் ஆண்டில் உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டில் சோதனை நடத்தியது.

அதேபோல், லாலுவின் மகனும், பீகார் துணை முதல்வராக இருந்த தேஜஸ்வியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. பினாமி சொத்துகள் இருப்பதாகக் கூறி ஆவணங்களையும் கைப்பற்றின. அதேபோல் லாலுவின் மகள் மிசா பாரதி மற்றும் அவரது கணவரது வீடு அலுவலகங்களிலும் சிபிஐ சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையை யடுத்து, பிகார் மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

மேலும், தம் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு மத்திய அரசின் மீது குற்றம் சாட்டிய லாலுவின் குரலுக்கு காங்கிரஸ் ஆதரவுக் குரல் கொடுத்தது. அதேபோல், லாலுவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டால் நிதிஷ்குமாருக்கு ஆதரவளிப்போம் என பிகார் பாஜக-வினர் கூறி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, பீகார் மாநிலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மெகா கூட்டணி அமைத்து பாஜக-வை வீழ்த்திய ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே பூசல் உருவானது.

இத்தகைய சூழலில், நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதாதள கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு பின்னர், ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட தேஜஸ்வி யாதவை துணை முதல்வராக வைத்துக்கொண்டு முதல்வர் பதவியில் தொடர தான் விரும்ப வில்லை என நிதிஷ்குமார் வெளிப்படையாக கூறினார். மேலும், பிகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் வழங்கினார். இதையடுத்து, பாஜக-வுடன் நிதிஷ், கூட்டணி அமைப்பது உறுதியானது. மேலும், நிதிஷ்குமாருக்கு ஆதரவளிப்போம் என பாஜக-வினர் வெளிப்படையாகவே அறிவித்தனர்.

பீகார் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தம் 243 இடங்கள். ஆட்சியமைப்பதற்கு மொத்தம் 122 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளக் கட்சிக்கு அங்கு 71 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். எனவே, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி (2), லோக் ஜனசக்தி கட்சி (2), இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா (1) ஆகிய கட்சிகள் நிதிஷுக்கு ஆதரவளித்தன.

அதனையடுத்து, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், தவிர மூன்று சுயேச்சைகளின் ஆதரவுடன் 132 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறி, அம்மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, ஆட்சியமைக்க நள்ளிரவில் நிதிஷ் உரிமை கோரினார்.

ஆளுநரின் அழைப்பை ஏற்று பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில், அம்மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார். அம்மாநில துணை முதல்வராக பாஜக-வின் சுஷில் குமார் மோடி பதவியேற்றார். அவர்கள் இருவருக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Nitish kumar and sushil modi sworn in as chief minister and deputy cm of bihar