டிராக்டர் பேரணியில் இறந்தவரின் உடலில் புல்லட் காயங்கள் இல்லை : பிரேத பரிசோதனையில் தகவல்

Tractor rally death : டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் உயிரிழந்த நவரீத் சிங் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Tractor rally death : மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் விவசாயிகளை சமாதானப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் வலுவடைந்ததால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டை நோக்கி டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடியரசு தினவிழாவில் வழக்கமான நிகழ்ச்சிகள் ரத்து செய்ப்பட்டது. ஆனாலும் டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. மேலும் போராட்டகாரர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் ஆர்பாட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். இந்த வன்முறை சம்பவத்தில் 24 வயதான நவரீத் சிங் என்பவர் உயிரிந்தார்.

இதில் அவர் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குண்டு தாக்கி இறந்ததாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், இறந்த நவரீத் சிங் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது குறித்து வெளியான அறிக்கையில், இறந்த நவரீத் சிங், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் இறந்ததாகவும், அவரது உடலில், துப்பாக்கி குண்டு தாக்கிய காயங்கள் ஏதும் இல்லை என்று உத்தரபிரதேசத்தில் ராம்பூர் மாவட்டத்தில் (இறந்தவரின் சொந்த மாவட்டம்) உயர் போலீஸ் அதிகாரி நேற்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராம்பூர் மாவட்ட நீதிபதி, ஆஞ்சநேய குமார் சிங் கூறுகையில், நவரீத் சிங் “பிரேத பரிசோதனையின் போது அவரது குடும்ப உறுப்பினர்கள் உடன் இருந்தது. அவருக்கு புல்லட் காயம் இருந்திருந்தால், பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிந்திருக்கும். இரண்டு மருத்துவர்கள் குழு நடத்திய இந்த பிரேத பரிசோதனை வீடியோகிராப் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட தலைமை மருத்துவ அலுவலரால் கண்காணிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ஷோகன் கவுதம் கூறுகையில், “நவரீத் சிங் பிரேத பரிசோதனை அறிக்கை புல்லட் காயங்களை இல்லை என தெளிவாக தெரிகிறது. உடல் முழுவதும் எக்ஸ்ரே செய்யப்பட்டது; இதில் உடலில் புல்லட் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவரது உடலில் ஆறு காயங்கள் இருந்தன, அவர் முகம் மற்றும் கால்களில் சிதைவு ஏற்பட்டுள்ளதாக ” பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. மேலும் அதிர்ச்சி மற்றும் அதிகபடியான இரத்தக்கசிவே அவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் ஐ.டி.ஓவில் பேரணிக்கு வந்த டிராக்டர் மோதி நவ்ரீத் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பிரேத பரசோதனை அறிக்கையின் படி, அவரது உடலில், புருவத்திற்கு அருகில், வாய்க்கு அருகில், வலது காதுக்கு மேல், மற்றும் வலது தொடையில், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் இடது காதில் மண்டை ஓட்டின் மேல் வீக்கம் இருந்ததாகவும், மார்பின் வலது பக்கத்தில் பலத்த காயம் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து நவ்ரீத் சிங் தந்தை சஹாப் சிங் கூறுகையில், விபத்து காரணமாக அவர் இறந்துவிட்டார் என்று சந்தேகிக்கப்படுகிறது. நவ்ரீத் சிங் இறப்புக்கான சடங்குடகள் அனைத்தும் முடிந்ததும், பிப்ரவரி 4 க்குப் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசாருக்கு எதிராக புகார் அளிக்கலாமா என்று முடிவு செய்வோம் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: No bullet wounds for tractor rally death person

Next Story
குடியரசு தினத்தில் நடந்த வன்முறை துரதிர்ஷ்டவசமானது; நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைpresident ramnath kovind, president ramnath kovind address to parliament, ராம்நாத் கோவிந்த், பட்ஜெட் 2021, ராம்நாத் கோவிந்த் பட்ஜெட் உரை, பட்ஜெட் 2021, நிர்மலா சீதாராமன், நரேந்திர மோடி, பிரதமர் மோடி, union budget session 2021, ramnath kovind budget speech, budget session, budget 2021, india, nirmala sitharaman, pm narendra modi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com