அசைவ உணவு உட்கொள்வதை விட சைவ உணவு உட்கொள்வதே சிறந்தது என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்ர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திங்கள் கிழமை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்ர் ஹர்ஷவர்தன் கூறியதாவது: எந்த வகையான உணவை உட்கொள்வது என்பது தனிநபர் சார்ந்த விஷயம். அதில் யாரும் தலையிட முடியாது. ஆனாலும், அசைவத்தை விட சைவம் சாப்பிடுவதே சிறந்தது. உலகநாடுகளில் குறிப்பாக ஜரோப்பிய நாடுகளில் பெரும்பாலான மக்கள் சைவ உணவின் பக்கம் திரும்பி வருகின்றனர்.
அறிவியல் ஆய்வு வெளியீட்டின் படி, அசைவ உணவுகள் உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படுவதாக தெரிகிறது. ஆனாலும், மக்களின் உணவு பழக்க வழக்கங்களை மாற்றும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்று கூறினார்.