Advertisment

ராகுல் காந்தி யாத்திரை: ரெண்டு பட்ட கர்நாடக காங்கிரஸ்; என்ன பிரச்னை?

காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை கர்நாடகாவில் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்குகிறது.

author-image
sangavi ramasamy
New Update
ராகுல் காந்தி யாத்திரை: ரெண்டு பட்ட கர்நாடக காங்கிரஸ்; என்ன பிரச்னை?

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை பயணம்) மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பயணம் யாத்திரை மேற்கொள்கிறார். கர்நாடகாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் 22 நாட்களுக்கு ராகுல் அங்கு யாத்திரை மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில், அங்கு மீண்டும் சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 22 நாட்கள் யாத்திரை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சித்தராமையா ஆதராவாளர்களை சிவகுமார் விமர்சித்தார். "அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கான கள ஆய்வு மேற்கொள்ள அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிசுனில் (அரசியல் வியூக அமைப்பாளர் சுனில் கனுகோலு) தலைமையில் ஒரு தனி குழுவை நியமித்துள்ளது. தினசரி அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. காங்கிரஸ் வெற்றிக்காக பணி நடைபெற்று வருகிறது. ஆனால் சிலர் இதற்கு உறுதுணையாக இல்லை.

முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டேவின் பெயரைக் குறிப்பிட்டு பேசி சிவகுமார், பாரத் ஜோடோ யாத்திரைக்காக அவரது தொகுதியில் இருந்து 5,000 பேரை அழைத்து வருமாறு நான் கேட்டேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். தனது தொகுதி தொலைவில் உள்ளதால் ஆட்களை அழைத்து வர முடியாது என்று கூறினார். ராகுல் காந்திக்காக இதை ஒருநாள் செய்ய முடியாதா?" என்று விமர்சித்தார்.

நேற்று, யாத்திரை நிர்வகிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட 18 குழுக்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தேஷ்பாண்டேவின் பெயர் இல்லை. கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத் யாத்திரைக்கான மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளளார்.

இந்தநிலையில் யாத்திரை ஒருங்கிணைப்பிற்கு சிவகுமாருக்கு முக்கியத்துவம் தருவதாக கூறப்படுகிறது. இதனால் சித்தராமையா ஆதரவாளர்கள் அதிருப்தி அடைவதாக தெரிகிறது. தங்கள் செயல்களிலிருந்து பின்வாங்குவதாகவும் கூறப்படுகிறது. சித்தராமையா ரத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1999ல் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் நடந்த பாஞ்சஜன்ய யாத்திரை போன்று, சட்டசபை தேர்தலுக்கு முன், சித்தராமையா பேரணி நடத்த உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை கூட்டத்தில், சிவகுமார் பேசுகையில், "சித்தராமையாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை விமர்சித்தார். சித்தராமையாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சிறப்பாக திட்டமிடப்படவில்லை. ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். ஆனால் அதற்கான முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர்" என்றார்.

முன்னதாக சித்தராமையாவின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டதை தொடர்ந்து இரு தலைவர்களுக்கும் இடையேயான உறவு மோசமடைந்தது. கட்சியில் தனிநபருக்கு கொண்டாட்டங்கள் கூடாது என்றார். பின்னர் ராகுல், கே.சி.வேணுகோபால் போன்ற மூத்த தலைவர் கொண்டாட்ட திட்டங்களை ஆதரித்த நிலையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

அடுத்த ஆண்டு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இரு தலைவர்களும் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகுமார் மற்றும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா சந்திப்பு குறித்து சித்தராமையாவுக்கு தகவல் தெரிவிக்காததால், அவர் சமீபத்தில் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. முதலில் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்தார். அவரை நிர்வாகிகள் சமாதானப்படுத்தி பின் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல், ராய்ச்சூரில் நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட கட்சி பேனரில் சித்தராமையாவின் படம் இடம்பெறவில்லை. இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

பல சந்தர்பங்களில் கட்சியினர் சித்தராமையாவை "உண்மையான காங்கிரஸ்காரர்" என நினைக்கவில்லை. 2006ஆம் ஆண்டில் அவர் காங்கிரஸில் இணைந்தார். முன்னதாக அவர்

ஜனதா பரிவாருடன் செயல்பட்டு வந்தார்.

மறுபுறம் சிவகுமார் 2020ஆம் ஆண்டு முதல் மாநிலப் பொறுப்பை ஏற்று கட்சியை வலுப்படுத்தி கட்டுக்குள் வைக்க பணியாற்றுகிறார். தெற்கு கர்நாடகாவில் ஆதிக்கம் செலுத்தும் வொக்கலிகா சமூகத்தை வலுப்படுத்துகிறார். அதேபோல் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குருபா சமூகத்தைச் சேர்ந்த சித்தராமையாவும் காங்கிரஸ் வாக்கு வங்கியிற்கு முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment