ரூ.50,000-க்கு மேல் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் இனி பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை சமர்ப்பிக்க அவசியம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. பண பரிவர்த்தனை மோசடி தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில்,நகை வியாபாரிகள் தங்களிடம் ரூ.50,000க்கு மேல் நகை வாங்குவோர் பற்றிய தகவல்களை நிதி புலனாய்வு அமைப்புகளுக்கு பகிர வேண்டிய அவசியம் இல்லை.
அதேபோல், ஒரு நிதியாண்டில் ரூ.2 கோடிக்கும் அதிகமான நகை, விலையுயர்ந்த பொருட்கள் விற்கும் வர்த்தகர்கள், பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இனி அவர்கள் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வரமாட்டார்கள் என அனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரூ. 2 லட்சத்துக்கும் அதிமான மதிப்பில் நகை வாங்குபவர்கள் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும் என்றிருந்தது. பண பரிவர்த்தனை மோசடி தடுப்பு சட்டத்தின்படி, ரூ.50,000க்கு மேல் நகை வாங்குவோர் புதிய கேஒய்சி விதிமுறைகளின் படி பான் கார்டு போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று மத்திய அரசு அவித்திருந்தது. இதனால், அந்த நகை விற்பனை மந்தமானது.
இந்தநிலையில் தான் ரூ.50,000-க்கு மேல் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் பான் கார்டு, ஆதார் கார்டு போன்றவற்றை சமர்ப்பிப்பது என்பது கட்டாமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு நகை வர்த்தகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பானது நகை விற்பனையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.