scorecardresearch

எந்த தேசிய பூங்காவிலும் இல்லாத சிறப்பு வசதி கஸிரங்காவில்!

அங்கே தங்குவதற்கு ஹோம் ஸ்டேக்களும் இருப்பதால் இந்த இடத்தை நீங்கள் மிஸ் செய்யாமல் சென்று பார்த்து ரசிக்கலாம்.

Now you can explore the beauty of Kaziranga on boats and bicycles

Travel and Tourism : அஸாம் மாநிலத்தில் அமைந்துள்ளது கஸிரங்கா தேசிய பூங்கா. ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் இருப்பிடமாக விளங்கும் இந்த பகுதியில் எக்கோ டூரிசத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று காரணமாக தூண்டப்பட்ட ஊரடங்கினாலும், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த போது ஏற்பட்ட வெள்ளத்தாலும் பெரும் சேதத்தை அடைந்துள்ளது கஸிரங்கா. அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த தேசிய பூங்காவில் பல்வேறு சுற்றுலா நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : மசினகுடி வலசை பாதை : யானைகளுக்கு இருக்கும் அங்கீகாரமும் உரிமையும் மனிதர்களுக்கு இல்லையா?

அதன் ஒரு பகுதியாக அங்கு தற்போது ட்ரெக்கிங், சைக்கிளிங் மற்றும் போட்டிங் போன்ற சிறப்பு அம்சங்களை செயல்படுத்தி வருகின்றனர். கஸிரங்காவின் வடக்கு பகுதியில் போட்டிங்கிற்கான ஏற்பாடுகள் ஆயத்தமாகி வருகின்ற நிலையில் தெற்கு பகுதியில் ட்ரெக்கிங் மற்றும் சைக்கிளிங் போன்ற அம்சங்களை உருவாக்கி வருகின்றனர்.

நதுதங்கா – பனேஷ் – வார் ஆகிய பகுதியை உள்ளடக்கிய 5 கி.மீ ட்ரெக்கிங்கிற்காகவும், சிராங்க் பகுதியில் 3 கி.மீ ட்ரெக்கிங்கிறாகவும் தேர்வு செய்துள்ளனர். இந்த இரண்டு பாதைகளும் பரபுஹார் வனச்சரகத்தின் கீழ் வருகிறது. இது மட்டும் அல்லாமல் 10 கி.மீ தொலைவை உள்ளடக்கிய சைக்கிளிங் பாதைகளையும் தேர்வு செய்துள்ளதாக தேசிய பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. அங்கே தங்குவதற்கு ஹோம் ஸ்டேக்களும் இருப்பதால் இந்த இடத்தை நீங்கள் மிஸ் செய்யாமல் சென்று பார்த்து ரசிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Now you can explore the beauty of kaziranga on boats and bicycles