ரயில் பயணத்தின்போது பயணிகள் தங்களது அடையாள ஆவணமாக “எம்.ஆதாரை” பயன்படுத்திக்கொள்ள இந்திய ரயில்வே அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பயணிகள் ரயில் பயணத்தின் அடையாள ஆவணமாக “எம்.ஆதாரை” பயன்படுத்த அனுமதி அளிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. தற்போது ரிசர்வேஷன் செய்து ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அடையாள ஆவணத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில், மொபைல் போனின் மூலமாக எம்.ஆதாரை ( மொபைல் போனில் ஆதார்ஆப் ) அடையள ஆவணமாக பயன்படுத்த அனுமதி அளிக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.
எம்.ஆதார் என்பது UIDAI-அறிமுகம் செய்த மொபைல் அப்ளிகேஷன் ஆகும். இதன் மூலம், பயனர்கள் தங்களது ஆதார் கார்டை மொபைல் போனில் டவுண்லோடு செய்து கொள்ள முடியும். ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் கொண்டே இந்த வசதியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பலான மக்கள் ஸ்மார்ட்போனுக்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில், ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் மத்தியில் இந்த வசதி பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.