Advertisment

நுபுர் சர்மா தலையை துண்டிக்க கோரி வீடியோ; அஜ்மீர் தர்கா ஊழியர் கைது

நபிகள் நாயகம் குறித்த அவதூறு கருத்துக்கு, நுபுர் சர்மா தலையைத் துண்டிக்க கோரி வீடியோ வெளியீடு; அஜ்மீர் தர்காவின் பராமரிப்பாளர் கைது

author-image
WebDesk
New Update
நுபுர் சர்மா தலையை துண்டிக்க கோரி வீடியோ; அஜ்மீர் தர்கா ஊழியர் கைது

Ajmer Dargah khadim arrested over appeal to behead BJP’s Nupur Sharma: நபிகள் நாயகம் பற்றிய கருத்துக்காக, முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் தலையை துண்டிக்குமாறு கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படும் வீடியோ தொடர்பாக அஜ்மீர் தர்காவின் பராமரிப்பாளரான சையத் சல்மான் சிஷ்டியை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Advertisment

தர்கா காவல் நிலையத்தின் SHO, தல்பீர் சிங், செவ்வாய்க்கிழமை இரவு சல்மான் சிஷ்டி கைது செய்யப்பட்டதாக கூறினார். காவல்துறையின் கூற்றுப்படி, நுபுர் ஷர்மா நபிகள் பற்றிய கருத்துக்களைக் கூறியதற்கு பின்னர், தற்போதிலிருந்து 3 வாரங்களுக்கு முன்னர் சல்மான் சிஷ்டி வீடியோ பதிவு செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ராகுல் காந்தி வீடியோ; ஜீ சேனல் தொகுப்பாளர் கைது தொடர்பாக உ.பி மற்றும் சத்தீஸ்கர் போலீசார் மோதல்

“முப்பது வயதுகளில் இருக்கும் சல்மான் சிஷ்டி, அஜ்மீர் தர்காவின் சான்றளிக்கப்பட்ட காதிம் மற்றும் அஞ்சுமான் தொகுதி வாக்காளரும் ஆவார். சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு, நுபுர் ஷர்மாவின் அறிக்கைக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் ஒரு வீடியோவைப் பதிவு செய்தார், அதில் எனக்கு திறமை இருந்திருந்தால், நான் நுபுர் சர்மாவை சுட்டுக் கொன்றிருப்பேன் என்று சல்மான் சிஷ்டி கூறியுள்ளார். மேலும், நுபுர் ஷர்மா நபியை அவமதித்ததால், நுபுர் ஷர்மாவின் தலையைக் கொண்டு வரும் எவருக்கும் சல்மான் சிஷ்டி தனது வீட்டையும் நிலத்தையும் கொடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார், ”என்று தல்பீர் சிங் கூறினார்.

கொலை, கொலை முயற்சி மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக சல்மான் சிஷ்டி மீது இதற்கு முன்பு 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் அவர் சில வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

“சல்மான் சிஷ்டி மீது தர்கா காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சமீபத்தில், நுபுர் ஷர்மாவின் தலையை துண்டிக்க அவர் அழைப்பு விடுக்கும் வீடியோ வைரலானது, அதைத் தொடர்ந்து நாங்கள் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தோம், ”என்று தல்பீர் சிங் கூறினார்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டம் (IPC), 153ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், நல்லிணக்கத்தைப் பேணுவதற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்கள்), 115 (குற்றத்தைத் தூண்டுதல், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை-குற்றம் செய்யவில்லை என்றால்), 117 (பொதுமக்கள் அல்லது பத்துக்கும் மேற்பட்ட நபர்களால் குற்றம் செய்யத் தூண்டுதல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டலுக்கான தண்டனை) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தல்பீர் சிங் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment