Advertisment

ஒடிசா டு கம்போடியா: முகவர்களால் ஏமாற்றப்பட்டு இணைய மோசடியில் ஈடுபடும் இந்தியர்கள்

5,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதுபோன்று சிக்கிய உள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்ட பிறகு, கடந்த வாரம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இதுகுறித்து பதிலளித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cambo.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஹைதராபாத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த, தினபந்து சாஹு என்பவர் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தைச் சேர்ந்த பல இளைஞர்களைப் போலவே, வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து, பணம் சம்பாதித்து மீண்டும் கிராமத்திற்குத் திரும்பி சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவை வளர்த்தார்

Advertisment

அவரது லட்சியம் அவரை கம்போடியாவிற்கு அழைத்துச் சென்றது. அங்கு அவரது கனவு நனவாகவில்லை, அவர் தனது மனைவியின் நகைகள் உட்பட அனைத்தையும் இழந்தார். 4 பேர் கொண்ட குடும்பத்தின் செலவிற்கு அவர் இப்போது, உள்ளூர் எரிபொருள் நிலையத்தில் வேலை செய்கிறார்.

கம்போடியாவில் சிக்கிய 5,000 இந்தியர்களில் ஒருவரான பிஸ்வநாத்பூர் கிராமத்தை சேர்ந்த சாஹு, சைபர் குற்றத்தில் ஈடுபட தள்ளப்பட்டார். இதுகுறித்தான வழக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு தெரிய வந்த பிறகு அவர் மீட்கப்பட்டு இந்தியா திரும்பினார்.  ஒன்றரை மாதங்கள் அங்கு இருந்த சாஹு கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடு திரும்பினார்.

5,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதுபோன்று சிக்கிய உள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்ட பிறகு,  இது தொடர்பாக இந்தியா, கம்போடிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதுவரை சுமார் 250 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்தது.  

சாஹுவைத் தவிர, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இது போன்று சிக்கி நாடு திரும்பிய கர்நாடகாவைச் சேர்ந்த இருவரை தொடர்பு கொண்டு பேசியது. அவர்கள் அனைவருக்கும் சொல்ல ஒரே மாதிரியான கதைகள் இருந்தன - இங்கு வேலை வாய்ப்புகள் இல்லாததை, அவர்களின் அவநம்பிக்கையைப் பயன்படுத்திக் கொள்ளும் முகவர்கள், உலகெங்கிலும் உள்ள மக்களை ஏமாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை, அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசாவைப் பறித்து நடைமுறையில் அவர்களை பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் முதலாளிகள்.  ஒரு சந்தர்ப்பத்தில், கர்நாடக இளைஞன் இதுகுறித்து புகார் எழுப்ப முயன்றபோது அவர் முதலாளியால் கடுமையாகத்  தாக்கப்பட்டார். 

சாஹு கூறுகையில்,  “படிப்பு முடித்த பிறகு, நான் பல நகரங்களில் - குர்கான், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் -  பகுதிகளில் ஒரு கணினி ஆபரேட்டராக வேலை செய்தேன், ரூ 20,000-25,000 சம்பாதித்தேன். எனது பகுதியில் இருந்து பல இளைஞர்கள் சவூதி மற்றும் பிற மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு குடிபெயர்வதால், நானும் எனது அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க முடிவு செய்தேன்" என்றார். 

சுண்டி என்ற சமூகத்தைச் சேர்ந்த சாஹு - பாரம்பரியமாக மது விற்பவர்கள்- அவரும் அவரது மூத்த சகோதரரும் இந்த தொழிலைத் தவிர்த்துவிட்டு பெரிய நகரங்களில் வேலை செய்ய விரும்பி முடிவு செய்ததாக கூறினார்.

“ நான் ஹைதராபாத்தில் பணிபுரிந்த போது, ​​ஒரு நபர் வதோதராவில் உள்ள ஒரு கன்சல்டன்சியைப் பற்றி என்னிடம் கூறினார். இந்த கன்சல்டன்சி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறினார். பின்னர்  என்னை அவர்கள் ஒரு வாட்ஸ்அப் குழுவில் சேர்த்தனர். வேலை வாய்ப்புக்காக காத்திருக்கச் சொன்னார்கள். 3-4 மாதங்களுக்குப் பிறகு, வியட்நாமில் வேலை இருப்பதாகச் சொன்னார்கள். நேர்காணல் செய்தார்கள். அதில் நான் வெற்றி பெற்றேன்” என்றார். 

அடுத்து அவர்கள் என்னிடம் விசா கட்டணமாக ரூ. 1.5 லட்சம் டெபாசிட் செய்யும்படி சொன்னார்கள். இதற்காக நான் என் மனைவியின் நகைகளை அடமானம் வைத்தேன். ஜூலை 25, 2023 அன்று கொல்கத்தாவில் இருந்து வியட்நாமிற்கு விமானம் மூலம் ஹோ சி மின் நகருக்கு சென்றடைந்தேன். அங்கு தான் சோதனை ஆரம்பமானது என்று கூறினார். 

நான் அங்கு தரையிறங்கிய பிறகு, அங்கு ஒருவர் வந்து என்னை காரில் அழைத்து சென்றார். கிட்டதட்ட 6-7 மணி நேரம் காரில் சாலை மார்க்கமாக பயணத்தோம். பின்னர் நான் கம்போடியா எல்லைப் பகுதியில் இருப்பதை அறிந்தேன். 

"நான் இந்தியாவில் உள்ள எனது முகவரை அழைத்தேன், ஆரம்பத்தில் எனக்கு வியட்நாமில் வேலை வழங்கிய நிறுவனம் என்னை நிராகரித்துவிட்டது என்று அவர் கூறினார். அவர்களே எனக்கு கம்போடியாவில் ஒரு வேலை ஏற்பாடு செய்திருப்பதாகவும், நான் ஏற்கனவே பணம் செலுத்தியதால் நான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். 

கம்போடியாவை அடைந்த பிறகு, மற்றொரு முகவர் என்னை அழைத்துக் கொண்டு மற்றொரு இடத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு நான் தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் பஞ்சாப்பில் இருந்து வந்த 3 மூன்று இந்தியர்களைச் சந்தித்தேன். 

“எனக்கு $900 தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் எனக்கு ஒரு மாதத்திற்கு $700 வழங்குவதால் நான் பயந்து திரும்பி வர விரும்பினேன். நான் தயங்கினாலும், தாய்லாந்து எல்லைக்கு அருகாமையில் உள்ள பாய்பெட் என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன், அங்கு நான் வேலைக்குச் சேர வேண்டியிருந்தது,” என்றார்.

முதல் 10 நாட்களுக்கு, என்னை பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் சில சமூக வலைதளங்களில் போலியான பெயர்களில் புதிய கணக்குகளை திறக்க சொன்னார்கள். அதற்கு பயிற்சி கொடுத்தார்கள்.

" அந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை. மேலும் இந்தியாவில் உள்ள முகவரைத் தொடர்பு கொண்டேன், ஆனால் அவர் என்னிடம் அவர்கள் சொல்வதை செய்யச் சொன்னார், மேலும் இந்த வேலைக்கு நல்ல சம்பளம் இருப்பதாகவும் எனக்கு உறுதியளித்தார்," என்று அவர் கூறினார். 

இந்த போலி கணக்குகள் மூலம் மற்றவர்களுடன் ஷேட் செய்து அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.   “நாங்கள் மோசடி செய்பவர்களாக இருந்தோம். அவர்களுடன் நட்பாக பழகியதும். மோசடி வணிகங்களில் 

முதலீடு செய்யும்படி அவர்களிடம் சொல்வோம்.  அது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் பணம் செலுத்தியவுடன் அவர்களை நாங்கள் ப்ளாக் செய்து விடுவோம். இதை என்னிடம் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மக்களிடம் செய்யச் சொன்னார்கள் என்றார். 

நல்ல நிதிப் பின்னணி கொண்டவர்கள் குறி வைக்கப்படுவர். அவர்களின் சுயவிவரங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும் - அவர்கள் ஓட்டிய கார் முதல் அவர்கள் அணிந்திருந்த கடிகாரங்கள் மற்றும் உடைகள் வரை அவர்கள் பயன்படுத்தும் கேஜெட்டுகள் வரை அனைத்தையும் அவர்கள் கவனிப்பர். 

“வேறு மொழி நபர்களைத் தொடர்பு கொள்ள மொழிபெயர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்தினோம். இந்தியா, இந்தோனேஷியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு சீன நிறுவனங்களுக்கு மோசடி செய்பவர்களாக அங்கு வேலை செய்கிறார்கள்,” என்றார் சாஹு.

அவர் இறுதியில் மேலும் வேலை செய்ய மறுத்தபோது, ​​​​சிசிடிவி கண்காணிப்பின் கீழ் ஒரு அறையில் வைத்து, வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். "நான் 32 நாட்கள் செய்த வேலைக்கு, எனக்கு ஊதியம் கிடைக்கவில்லை," என்று அவர் கூறினார்.

இறுதியில் சாஹுவின் குடும்பத்தினர் உள்ளூர் பா.ஜ.க தலைவரை அணுகினர், அவர் மத்திய மந்திரி பிரதானிடம் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டார். பிரதான் தனது அமைச்சரவை சகாவான எஸ் ஜெய்சங்கரிடம் இதைத் தெரிவித்தவுடன், சாஹு நாடு திரும்புவது சாத்தியமானது.

அது ஒரு சிறை 

கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில், அசோக், 28, பி.காம் பட்டம் பெற்றிருந்தாலும், வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாங்காக் வழியாக கம்போடியா சென்றடைந்த அவர், நவம்பரில் இந்திய தூதரகம் மூலம் திரும்பி வர முடிந்தது. அவர் கூறுகையில், “டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணி இருப்பதாக கூறினார்கள். இதற்கு மாதம்  ரூ.80,000-1,00,000 சம்பளம் வழங்குவதாகவும் கூறினார்கள். என்னை அழைத்து சென்ற கவர் பக்கத்து ஊரில் குடியிருந்தார்,'' என்றார்.

"அவர் என்னை அங்கு அழைத்து சென்றார். ஆரம்பத்தில், நான் ஒரு தனி அறையில் இருந்தேன். பின்னர் dormitory-க்கு மாற்றப்பட்டேன். எனது பாஸ்போர்ட் மற்றும் விசா பறிக்கப்பட்டது, இரண்டு வாரங்களுக்குள், நான் ஒரு இணைய மோசடி வேலையை செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். நான் ஆட்சேபம் தெரிவித்தபோது, ​​என்னை விடுதலை செய்ய எனது மேலாளர் ரூ.13 லட்சம் கேட்டார். அது ஒரு சிறையைத் தவிர வேறில்லை,” என்றார்.

எங்கும் செல்ல முடியாத நிலையில், அசோக் போன்ற பலர் தங்கள் சூழ்நிலைகளுடன் சமரசம் செய்தனர். பெண் போன்று  அவர்கள் டேட்டிங் ஆப்களில் மற்றவர்களிடம் பேசினார்கள். 

தனது வாட்ஸ்அப் ஷேட்டில் தனது முதலாளிகளால் கண்காணிக்கப்படுவதை அறியாத அசோக், ஒரு நாள் டேட்டிங் செயலியில் தான் சந்தித்த ஒரு நபரிடம் நம்பிக்கை தெரிவித்தார். "நான் ஒரு இருண்ட அறையில் வைக்கப்பட்டேன், இரும்பு கம்பியால் தாக்கப்பட்டேன், குறைந்த தீவிரம் கொண்ட அதிர்ச்சிகள் கொடுக்கப்பட்டேன். எனது தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது; அது நரகம். ஆறு நாட்கள் சிறைவாசத்தின் போது, ​​அவர்கள் எனக்கு இரண்டு முறை ஃபோனைக் கொடுத்தார்கள், ஆனால் என்னை விடுவிக்க எனது குடும்பத்தினரிடம் பணம் கேட்க முடிந்தது. என்ன நடந்தது என்பதை என் குடும்பத்தினர் உணர்ந்ததும், கர்நாடகாவில் போலீசில் புகார் அளித்தனர்,'' என்றார்.

அசோக் தனது நண்பரும் பக்கத்து வீட்டுக்காரருமான மஞ்சுநாத் ரவியையும் அழைக்க முடிந்தது. “முதலில் அசோக், பின்னர் கம்போடியாவைச் சேர்ந்த ஒரு பெண், அவரை விடுவிக்க ரூ.13 லட்சம் கேட்டார். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் என்னிடம் உறுதியளித்தனர். இதற்கிடையில், முகவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது, ”என்று ரவி கூறினார், கம்போடியாவில் உள்ள முகவருடன் போலீசார் தொடர்பு கொண்டு, அவரது விடுவிக்கும்படி அழுத்தம் கொடுத்தனர். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/long-reads/odisha-to-cambodia-via-vietnam-how-indians-hoping-for-a-better-life-were-duped-by-dishonest-agents-turned-into-cyber-scammers-9255450/

அழுத்தத்தின் கீழ், ஏஜென்ட் அசோக்கை விடுவித்தார் - ஆனால் போதைப்பொருளை அவனது சாமான்களில் வைக்கும் முன் அல்ல, அதனால் அவன் வழியில் மாட்டிக் கொள்வான் என்று திட்டம் போட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அசோக் தன்னிடம் பை எதுவும் எடுத்துச் செல்லவில்லை. 

அசோக் மற்றும் ஸ்டீபன் என்ற மற்றொரு இளைஞர் இருவரும் அதிர்ஷ்டவசமாக  திரும்பி வந்தாலும், இதுபோன்று நூற்றுக்கணக்கான இந்தியர்கள் தொடர்ந்து அங்கு சிக்கியுள்ளனர் என்று கூறினர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment