2017-18 மற்றும் 2020-21 க்கு இடையில் நாடு முழுவதும் நடந்த 217 தொடர்ச்சியான ரயில் விபத்துகளில் நான்கில் மூன்று விபத்துக்கள் தடம் புரண்டதால் ஏற்பட்டதாக இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய ரயில்வேயில் ரயில் தடம் புரண்டது தொடர்பான தணிக்கை அறிக்கை 2022 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தடம் புரண்டதற்கு முக்கிய காரணம் "தடங்களை பராமரித்தல்" தொடர்பான பிரச்னைகள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், ரயில் பாதை புதுப்பித்தல் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு பல ஆண்டுகளாக குறைந்துவிட்டதாகவும், இந்த நிதி கூட முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்றும் அது கூறியது.
இதற்கிடையில், 217 தொடர்ச்சியான ரயில் விபத்துகளில் 163 தடம் புரண்டதால் ஏற்பட்டவை என்று அறிக்கை காட்டுகிறது.
இது மொத்த விபத்துகளில் 75 சதவீதமாகும். இதைத் தொடர்ந்து ரயில்களில் தீ விபத்துகள் (20), ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்துக்கள் (13), மோதல்கள் (11), ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்துக்கள் (8), மற்றும் இதர (2) விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.
மேலும், ரயில் விபத்துகளை ரயில்வே வாரியம் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்துகிறது. ஒன்று, தொடர் ரயில் விபத்துகள் மற்றும் பிற ரயில் விபத்துகள் ஆகும்.
பிற ரயில் விபத்துக்கள் பிரிவில் 1800 விபத்துக்கள் நடந்துள்ளன. தொடர்ந்து, பாதை புதுப்பித்தல் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு 2019-20ல் ரூ.9,607.65 கோடியில் (2018-19) இருந்து ரூ.7,417 கோடியாக குறைந்துள்ளது என்று அறிக்கை எடுத்துக்காட்டியது.
இதற்கிடையில், புதுப்பித்தல் பணிகளை கண்காணிக்க ஒதுக்கப்பட்ட நிதியும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்று அது கூறியது. 2017-21 ஆம் ஆண்டில் 1127 தடம் புரண்டதில், 289 தடம் புரண்ட சம்பவங்கள் (26 சதவீதம்) தடம் புதுப்பித்தலுடன் இணைக்கப்பட்டுள்ளன” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“