Advertisment

மமதா பானர்ஜியை கொலை செய்ய உதவினால் $100,000 பரிசு.... ஷாக் வாட்ஸ்அப் மெசேஜ்!

மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பனர்ஜியை கொலை செய்ய உதவி செய்தால் ரூ.65 லட்சம் கொடுக்கப்படும் என வந்த வாட்ஸ்அப் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
WhatsApp, Mamata Banerjee, Bengal student, 65 lakh,

மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பனர்ஜியை கொலை செய்ய உதவி செய்தால் ரூ.65 லட்சம் கொடுக்கப்படும் என வந்த வாட்ஸ்அப் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநில முதலமைச்சராக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை கொலை செய்ய உதவினால், $100,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ,65 லட்சம்) கொடுக்கப்படும் என 19-வயது மாணவருக்கு வாட்ஸ்அப் செய்தி வந்துள்ளது. அந்த வாட்ஸ்அப் நம்பரானது ஃபுளோரிடா மாகாணத்தைச் சார்ந்தது என்றும், அங்குள்ள பாலிடெக்னிக் மாணவர்  அந்த எண்ணை பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அம்மாநில போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

வாட்ஸ்அப்-ல் வந்த செய்தியை பார்த்த அந்த மாணவர் கூறும்போது: கடந்த திங்கள் கிழமை வாட்ஸ்அப்-ல் மெசேஜ் வந்தது. மெசேஜ் அனுப்பியவர் தன்னை லத்தீன் என அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், தீவரவாத இயக்த்திற்காக அவர் வேலை செய்வதாகவும், தற்போது இந்தியாவில் அதற்கு ஒரு பார்ட்னர் வேண்டும் என்று கூறியதாக அந்த மாணவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, அந்த உரையாடலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

எங்களுக்கு உதவி செய்தால் , $100,000 உங்களுக்கு கொடுக்கப்படும். உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் இதற்கு தயாரா?

இதற்கு, சிறிது நேரம் காத்திருங்கள் என அந்த மாணவர் பதில் அளித்துள்ளார்.

மறுமுனையில், ஓ.கே... ஆனால், விரைந்து முடிவை கூறுங்கள். அல்லது நாங்கள் வேறு ஒருவரை தேர்வு செய்து விடுவோம் என மெசெஜ் வந்துள்ளது.

மதியம் 1.10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது, நோ.. தேங்ஸ் என மாணவர் பதிலளித்துள்ளார்.

இதன்பின்னர் 2.46 மணியளவில் மீண்டும் ஆன்லைன்-க்கு வந்திருக்கிறார் அந்த மர்மநபர். அப்போது, நீங்கள் தொகையை இழந்துவிட்டதாக மெசெஜ் வந்துள்ளது.

பின்னர் 3.30 மணியளவில் ஒரு மெசெஜ் வந்துள்ளது. அதில், நான் இந்தியாவிற்கு வரவிரும்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாணவன் பதிலளிக்கையில், எனக்கு இந்தியா மீது அதிக பற்று உள்ளது. எனவே இந்தியாவை அழிக்க விரும்பவில்லை என கூறியிருக்கிறார்.

ஆனால், அந்த மர்ம நபர், இந்தியாவை அழிப்பது எங்களது நோக்கம் அல்ல. மாறாக ஒரே ஒருவரை மட்டும் கொலை செய்ய வேண்டும் என்பதே எங்களின்  நோக்கம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Mamata Banerjee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment