பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் நாளை கருப்பு தினமாக அறிவிக்க எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் இதனை தெரிவித்தார்.
மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது: நவம்பவர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்ப்டட நிலையில், அதுதான் இந்த இந்த நூற்றாண்டின் ஊழல் ஆகும். இதன் காரணமாகவே நவம்பர் 8-ம் நாளை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்திருக்கிறோம். மக்களுக்கு மிகுந்த சிரமத்தையை ஏற்படுத்திய இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் 18 அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டு நவம்பர் 8-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனையொட்டி, டெல்லியில் எதிர்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நவம்பவர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.