ஜூலை 27 ம் தேதி கணக்கீட்டின்படி 11.44 லட்சத்திற்கும் மேற்பட்ட பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்துள்ளார்.
மாநிலங்கவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப் பூர்வமாக மத்திய நிதித்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் பதிலளித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஒரே நபருக்கு பல பாண் எண்கள் வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, இது போன்று முறைகேடாக பான் எண்கள் கண்டறியப்பட்டு, ஜூலை 27 வரை 11,44,211 பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒருவருக்கு ஒரு பான் எண் வழங்கப்பட வேண்டும் என்பதே விதி, ஆனால் இந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
மேலும், 1566 போலியான பான் கார்டுகளும் கண்டறியப்பட்டுள்ள. பான் எண் வாங்கியவர் என்ற முறையில் குறிப்பிடப்பட்ட அந்த நபரே இல்லாமலோ அல்லது தவறான பெயர் மற்றும் அடையாள ஆவணங்கள் மூலம் பான் கார்டுகள் பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.