பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 2 பேர் பலி!

பாதுகாப்பு கருதி, எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன...

காஷ்மீரின் எல்லையில் அமைந்துள்ள ரஜோரி மாவட்டத்தின் நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில், அத்துமீறி நுழைந்து, பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதலில் நவ்சேரா பகுதியில், பொது மக்கள் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 3 பேர் காயமடைந்துள்ளனர்.

எனவே, பாதுகாப்பு கருதி, எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை ரஜோரி மாவட்டத்தின் நவ்சேரா மற்றும் மன்ஜகோட் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close