சார்ஸ்-கோவி-2-வின் முதல் அனைத்திந்திய 1000 மரபணு வரிசைப்படுத்துதல் வெற்றிகரமாக முடிவடைந்தது. இதில்,ஐரோப்பிய பயணிகளால் கொண்டுவரப்பட்ட வைரஸ் வகை, இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றை ஏற்படுத்தும் மிக முக்கிய வகையாக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில், குறிப்பிட்ட ஒரு வகை வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருவதால் (8 வெவ்வேறு வகைகள் இருப்பதாக தெரிய வந்தது) கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மற்றும் உத்தேச சிகிச்சை அணுகுமுறைகள் எளிதாக அமையும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
" மார்ச் , மே மாதங்களில் நடைமுறையில் இருந்த கடுமையான பொது முடக்கநிலை, சர்வதேச விமானப் பயணங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்குத் தடை போன்ற நடவடிக்கைகளால் இந்தியாவில் வைரசின் மற்ற பரம்பரைகள் தடுக்கப்பட்டன" என்று ஆய்வில் தெரிய வந்ததாக ஆய்வில் கலந்து கொண்ட சில நிபுணர்கள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை உயிரி தொழில்நுட்பத் துறையால் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் முன் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், "A2a ஹாப்லோடைப் இதற்கு முன்பு இருந்த அனைத்து ஹாப்லோடைப்களையும் வேரோடு அகற்றியதாக தெரிவிக்கிறது. ஹாப்லோடைப் என்பது ஒரு உயிரினத்திற்குள் உள்ள, ஒரு பெற்றோரிடமிருந்து ஒன்றாகப் பெறப்பட்ட மரபணுக்கள் குழு என்பதாகும்.
ஐரோப்பா, அமெரிக்கா, கிழக்கு ஆசியாவிலிருந்து வந்த பயணர்களால் இந்தியாவில் சார்ஸ்-கோவி-2 வைரசின் வெவ்வேறு வகைகள் கோவிட்-19 தொற்றினை ஏற்படுத்துகின்றன என ஆரம்ப கட்ட ஆய்வுகள் தெரிவித்தன. அதில், குறிப்பாக, டி 614 ஜி (மரபணு) பிறழ்வைக் கொண்ட , A2a ஹாப்லோடைப்பின் (20A / B / C) ஆதிக்கம், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உருவாகி வருவதாகக் கண்டறியப்பட்டது. இந்த குறிப்பிட்ட ஹாப்லோடைப், உலகளவில் தொற்று பரவலில் அதிக செயல்திறன் கொண்டதாகவும் கருதப்படுகிறது ,’’ என்று அறிக்கை கூறுகிறது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
"இந்தியாவில் பெருமளவில் காணப்படும் ஹாப்லோடைப் தன்மை, ஐரோப்பிய கிளஸ்டரிலிருந்து வந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பா, சவுதி அரேபியாவிலிருந்து வந்த பயணிகள் மூலமாக இந்த தன்மை வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்தது. கடந்த ஜனவரி மாதத்தின் ஆரம்ப நாட்களில், இந்தியாவில் சாரஸ்- கோவிட் -19 வைரசின் 19 ஏ, 19 பி வகைகள் (வுஹான் வகைகள்)இந்தியாவில் கோவிட்- 19 நோயை எற்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. சீனாவிலிருந்து வந்த பயணர்கள் மூலம் இந்தியாவிற்குள் இந்த வகை வைரஸ் நுழைந்திருக்கலாம். ஆனால், தற்போது இந்த வகை வைரசிகளின் தாக்கம் குறைவாக காணப்படுகிறது. A2a ஹாப்லோடைப் வகையின் ஆதிக்கம் தற்போது வலுவாக உள்ளது. தற்போது, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் ஒரு வலுவான வைரஸ் தன்மையாகவும் இது உள்ளது, ’’ என்கிறார் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தேசிய உயிரியல் மருத்துவ மரபியல் ஆய்வகத்தில் பணிபுரியும் (NIBMG) முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் அரிந்தம் மித்ரா தெரிவித்தார்.
சார்ஸ் கோவி-19 வைரஸின் உலகளாவிய பண்பாக கருதப்படும் டி164- ஜி மரபணு பிறழ்வு வகை வைரஸ் டெல்லியில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணாமாகவும், டெல்லியில் கொரோனா தொற்றுப் பரவலின் வேகம் வீழ்ச்சியடைந்ததாகவும் கருதப்படுகிறது.
"ஆய்வுகள் முழுமைடையும் வரை, எங்களால் உறுதியாக எதுவும் கூற முடியாது. டி164- ஜி மரபணு வைரசை நோய்ப் பரவலில் அதிக செயல்திறன் கொண்டதாக மாற்றுகிறது. இந்த வகை வைரஸ்கள் சரிவைச் சந்தித்தால், டெல்லியில் நோய்ப் பரவல் குறைய ஆரம்பித்திருக்கலாம்,’’ என்கிறார் ஆராய்ச்சி குழுவில் அங்கம் வகித்த என்.ஐ.பி.எம்.ஜி இயக்குநர் டாக்டர் சவுமித்ரா தாஸ் குறிப்பிடுகிறார்.
சார்ஸ்-கோவி-2-வின் முதல் அனைத்திந்திய 1000 மரபணு வரிசைப்படுத்துதல் திட்டத்திற்கு ஒருங்கிணைப்பு நிறுவனமாக என்ஐபிஎம்ஜி நிறுவனம் செயல்பட்டது. 10 மாநிலங்களில், ரியல் டைம் பி.சி.ஆர் பரிசோதனை முறைக்கு உட்படுத்தப்பட்ட 1,000 பேரின் மாதிரிகள் கொண்டு மரபணு வரிசைப்படுத்துதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் கிழக்கு, வடக்குப் பகுதிகளில் 20 ஏ ஹாப்லோடைப் வகைகள் ஒத்திருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு, தெற்குப் பகுதிகளில் 20 பி ஹாப்லோடைப் அதிகளவு பரவுயுள்ளது.
"இன்-விட்ரோ போன்ற உயர்மட்ட ஆராய்ச்சிகள் முடியும் வரை ஹாப்லோடைப் வகைகளின் வீரியத் தன்மையை மதிப்பிடுவது கடினம். வைரஸின் வலிமை, அதன் பிறழ்வை மட்டும் சார்ந்தது அல்ல , ஓம்புயிரி இயக்கத்தையும் (HOST) சார்ந்தது. இந்தியா வெவ்வேறு சமூக-பொருளாதார இயல்பு மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்ட ஒரு பரந்த நாடு. நம் உணவுமுறை, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை மாறுபடுகிறது,’’ என்று சவுமித்ரா தாஸ் கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.