பாரடைஸ் பேப்பர்ஸ்: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் விடுபட்டது எப்படி?

மேலும், சன் டிவிக்கு முன்னதாகவே, என்.டி.டி.வி. ரேடியோ நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்ததாக தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

By: Updated: November 7, 2017, 06:41:48 PM

ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் உட்பட அனைவரையும் கடந்த பிப்ரவரி 2, 2017 அன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்தது. குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர்களை விடுதலை செய்வதாக நீதிமன்றம் கூறியது. 424 பக்கங்கள் கொண்ட நீதிபதி ஓ.பி.ஷைனியின் தீர்ப்பின் நகல், ஆவணங்கள், நிறுவனங்களின் தரப்பில் தாக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவை வெளிநாட்டு சட்ட உதவி செய்யும் ஆப்பிள்பை நிறுவனத்திடம் உள்ளது. ஏனெனில், இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட மலேசிய நிறுவனமான ஆஸ்ட்ரோவுக்கு வழக்கு நடைபெற்ற 6 ஆண்டுகளாக ஆப்பிள்பை நிறுவனம் சட்ட உதவி வழங்கிவந்தது.

பின்னணி:

தயாநிதி மாறன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் ஊழல் நடைபெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. சிபிஐ தரப்பின் பிரதான குற்றச்சாட்டு என்னவென்றால், மலேசிய நிறுவனமான ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் துணை நிறுவனமானது, தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை வாங்க, ஆஸ்ட்ரோ நிறுவனம் செலுத்திய 122 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அந்நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனமான மேக்சிஸ், ஏர்செல் டெலிவெஞ்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை கொள்முதல் செய்வதற்கான சரியீட்டாக இருந்தது என்பதாகும்.

இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையின்படி, அனந்த கிருஷ்ணன், ஆஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க் மற்றும் மேக்சிஸ் நிறுவனங்களின் விளம்பரதாரர் ஆவார். மேலும், மலேசிய முதலீட்டு நிறுவனமான உசாஹா தெகாஸ் நிறுவனத்தின் தலைவராகவும் அனந்த கிருஷ்ணன் இருந்தார். மேற்கண்ட இரண்டு நிறுவனங்களிலும் அவருக்கு போதுமான பங்குகள் இருந்துள்ளன. மேலும், ஆஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க், மேக்சிஸ், உசாஹா தெகாஸ் ஆகிய 3 நிறுவனங்களின் இயக்குநராக இருந்தவர் ரால்ஃப் மார்ஷல் ஆவார்.

இந்த வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி குற்றம்சாட்டப்பட்ட தயாநிதிமாறன் உட்பட்டோரையும், ஆஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், சன் டைரக்ட் டிவி உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டன.

மாறன் சகோதரர்களில் ரூ.742 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கிய 2 ஆண்டுகளில் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆப்பிளபை நிறுவனம், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெளியுலகுக்கு தெரியாமல் மேற்கொண்ட பல பண பரிவர்த்தனைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இந்த வழக்கு குறித்து சிபிஐ மலேசிய அரசாங்கத்திற்கு சட்டப்பூர்வமாக கடிதம் அனுப்பும் என ஆஸ்ட்ரோ நிறுவனம் எதிர்பார்த்திருந்த சமயத்தில், கடந்த மே 22,2012 அன்று ஆப்பிள்பை நிறுவனம் ஒரு ஆவணத்தை தயாரித்தது. மேலும், ஏப்ரல் 22, 2015 தேதியிட்ட ஆப்பிள்பை ஆவணத்தில்,”தெற்காசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களால் சன் டைரக்ட் டி.வி.யில் பின்தொடரும் முதலீட்டாளர்களுக்கு மொரிஷியஸ் சட்டங்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப முதலீடு செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும்” பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அஸ்ட்ரோ ஓவர்சீஸ் லிமிடெட் (ஏஓஎல்) வழியாக ஆஸ்ட்ரோவின் முதலீட்டிற்கான கட்டமைப்பை இந்த ஆவணம் விவரிக்கிறது. இது பெர்முடாவில் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும், மேலும் மலேசியாவில் வெளிநாட்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஏஓஎல், இதற்கு முற்றிலும் சொந்தமாக தெற்காசிய எண்டர்டெயிண்மெண்ட் லிமிடெட் உள்ளது, இது மொரிஷியஸில் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் சன் டைரக்டில் 20% பங்குகளை வைத்துள்ளது.

2007-ஆம் ஆண்டில் சன் டைரக்டில் ஆஸ்ட்ரோவின் முதல் 122 மில்லியன் டாலர்கள் முதலீடு உண்மையானது அல்ல. அதன்பிறகு, தயாநிதி மாறனுக்கு பயனளிக்கும் ஒரு “சட்டவிரோத திருப்தி” என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

இதற்காக நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தில், என்.டி.டி.வி. செய்தி நிறுவனம் பங்குதாரராக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்நிறுவனத்தில் என்.டி.டி.வி. நிறுவனத்துக்கு 1.09% பங்குள்ளதும் தெரியவந்துள்ளது. ஆனால், வெளிநாடு நேரடி முதலீட்டின்போது 2.39% பங்குகளை வைத்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற பங்குதாரர்களின் நிறுவன பெயர்களும் வெளியாகியுள்ளன. இதில், சன் நெட்வொர்க் அதிகபட்சமாக 86.85% பங்குகளையும், கலாநிதிமாறனிடம் மட்டும் 0.32% பங்குகளையும், ஏ.எச்.மல்டிசாஃப்ட் என்ற நிறுவனம் 11.74% பங்குகளையும் வைத்துள்ளது. இந்த ஆவணங்களில், என்.டி.டி.வி. நிறுவனத்தின் அலுவலக முகவரியான ஓக்லா இண்டஸ்ட்ரியல் ஏரியா முகவரியே தரப்பட்டுள்ளது.

மேலும், ஆஸ்ட்ரோ நிறுவனம் மற்றும் சிபிஐ தரப்புக்கிடையேயான ஆவணங்கள், இந்த வழக்கின்போது அக்டோபர் 9, 2011 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஆகியவையும் ஆப்பிள்பை நிறுவனத்திடம் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஆப்பிள்பை நிறுவனம் பங்கேற்ற ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் அவசர கூட்டம் குறித்த ஆவணகங்களும் மே22, 2012  தேதியிட்ட ஆவணமும் உள்ளது.

மார்ச் 21, 2012 தேதியிட்ட மற்றொரு ஆவணத்தில், ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் அப்போதைய தலைவர் ஹாஜி பத்ரி மஸ்ரி, சிபிஐ முன்னாள் இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில், அந்நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்துடன் முதலீட்டில் ஈடுபட்டிருப்பது, இந்தியாவில் டி.டி.எச். துறையில் முதன்மையானது என கர்வத்துடன் எழுதியுள்ளார். மேலும், கடந்த மே, 2011-ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ நிறுவனம், சன் டைரக்ட் நிறுவனத்திடம் கூடுதலாக 125 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்து, 20% பங்கை 35%-ஆக அதிகரிக்கும் இறுதி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புகார் குறித்து என்.டி.டி.வி. விளக்கம்:

என்.டி.டி.வி. நிறுவனம் 2005-ஆம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ரேடியோ நிறுவனங்களில் முதலீடு செய்ய துவங்கியது. ஆனால், அதற்கு முன்பாகவே கலாநிதி மாறன் ரேடியோ நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தார். இந்த ரேடியோ நிறுவனங்களில் என்.டி.டி.வி நிறுவனத்தின் பங்கு 3 சதவீதத்துக்கும் குறைவுதான். கடந்த 2009-ஆம் ஆண்டு சி.பி.ஐ. ஆஸ்ட்ரோ நிறுவனத்திடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கும் முன்பாகவே, ரேடியோ நிறுவனங்களிலிருந்து என்.டி.டி.வி. விலகியது.

புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள என்.டி.டி.வி., தாங்கள் கலாநிதிமாறனுடனும், சன் டிவியுடனும் நேரடியாக முதலீடு ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக கூறுவது தவறு என கூறியுள்ளது. மேலும், சன் டிவிக்கு முன்னதாகவே, என்.டி.டி.வி. ரேடியோ நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Paradise papers kalanithi marans company was set to get rs 563 crore when cbi moved in

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X