Advertisment

பாரடைஸ் பேப்பர்ஸ்: வெளிநாட்டு ஸ்டெண்ட் நிறுவனம் மூலம் வரி ஏய்ப்பு செய்து சொத்துக்குவித்த முன்னணி மருத்துவர்

இந்தியாவில் மருத்துவத்தில் முன்னிலை வகிக்கும் ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையின் தலைவரும் மருத்துவருமான அசோக் சேத் பெயரும் இடம் பெற்றுள்ளது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
,Paradise Papers, Paradise Papers India, Paradise Papers Indian Names, Paradise Papers Leaks, What is Paradise Papers

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி நிறுவனம் அங்கம் வகித்த சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் அமைப்பு வெளியிட்ட 'பாரடைஸ் பேப்பர்ஸ்' ஆவணங்களில், அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் மட்டுமல்லாமல், இந்தியாவின் முன்னனி மருத்துவர் அசோக் சேத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

Advertisment

உலகின் முன்னணி தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோர், தங்களது சொத்துகளை மறைத்து வரி ஏய்ப்பு செய்த விவரங்களை பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட அதிர்வுகளே இன்னும் குறையாத நிலையில், 'பாரடைஸ் பேப்பர்ஸ்' எனும் மற்றொரு அதிரடியை கிளப்பியுள்ளது புலனாய்வு அமைப்பு.

வெளிநாட்டு சட்ட உதவி செய்யும் ஆப்பிள்பை என்ற நிறுவனத்திடம் இருந்து ரகசியமாகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆவணங்கள் ஆகியவற்றின் மூலம் பல இந்தியர்கள் உட்பட, கார்பரேட் நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை எப்படி வரியை ஏமாற்றிச் சொத்துக்களைச் சேர்த்துள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. இதில், 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக 19-வது இடத்தில் இந்தியா உள்ளதாகவும், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்ட புலனாய்வு செய்தியில் தெரியவந்துள்ளது. பனாமா பேப்பர்ஸை வெளியிட்ட சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் அமைப்புதான், இந்த பாரடைஸ் பேப்பர்ஸையும் வெளியிட்டுள்ள்ளனர். இந்த புலனாய்வில், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிக்கையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பாரடைஸ் பேப்பர்ஸ் வெளியிட்ட வரி ஏய்ப்பு புகாரில், அமிதாப் பச்சன், விஜய் மல்லையா, சிவில் விமான போக்குவரத்து இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா பெயர்களும் இடம்பெற்றுள்ளன. 'ஒமிட்யார்' நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்ட விவகாரத்தில் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பெயர் உள்ளது.

இதில், இந்தியாவில் மருத்துவத்தில் முன்னிலை வகிக்கும் ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையின் தலைவரும் மருத்துவருமான அசோக் சேத் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவருக்கு பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' மேற்கொண்ட புலனாய்வில், கடந்த 2004-ஆம் ஆண்டு சிங்கப்பூரை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவரும், பயோசென்சார்ஸ் இண்டர்நேஷனல் குரூப் லிமிடெட் எனும் ஸ்டெண்ட் (மருத்துவ உபகரணம்) தயாரிப்பு நிறுவனம் மருத்துவர் அசோக் சேத்துக்கு பங்குகளை வழங்கியது தெரியவந்துள்ளது.

அதேசமயத்தில், மருத்துவர் அசோக் சேத், நோயாளிகளுக்கு இந்த நிறுவனத்தின் ஸ்டெண்டுகளை பரிந்துரை செய்து மேலும் ஆதாயம் அடைந்திருப்பதும், பாரடைஸ் பேப்பர்ஸ் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனம் இருதய நோய்கள் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்களின் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.

அந்நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையின் படி, பயோசென்சர்ஸ் இன்டர்நேஷனல் க்ரூப் லிமிட்டெட் மே 28, 1998-இல் பெர்முடாவில் இணைக்கப்பட்டது. மேலும், மே 20, 2005-இல் சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச் செக்யூரிட்டிஸ் டிரேடிங் லிமிடெடில் பட்டியலிடப்பட்டது.

மருத்துவர் அசோக் சேத் உட்பட அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் இந்தோனேஷிய நாடுகளில் உள்ள மருத்துவர்களுக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு அந்நிறுவனம் கிட்டத்தட்ட 13 முறை நிதியாதாரம் வழங்கியிருப்பது, அந்நிறுவனத்தின் குழு உறுப்பினர்களின் அக்டோபர் 19, 2004 தேதியிட்ட கூட்டத்தின் மினிட்ஸ் பதிவிலிருந்து உறுதியாகியுள்ளது. மேலும், மருத்துவர் அசோக் சேத்துக்கு அந்நிறுவனத்தின் 5,000 பங்குகளை, அதாவது 90,000 டாலரை வழங்கியதாக அந்த மினிட்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயத்தில், கடந்த ஜனவரி 28, 2005 தேதியிட்ட அந்நிறுவனத்தின் சிறப்பு பொதுக்கூட்டத்தின் மினிட்ஸ் பதிவில், ஒவ்வொரு பங்கும் 50 பங்குகளாக பிரிக்கப்படுவதால், மருத்துவர் அசோக்கின் பங்கு 2,50,000-ஆக உயர்ந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த புகார் குறித்து விளக்கமளித்த அசோக், அக்டோபர் 2004-ஆம் ஆண்டு தனக்கு 5,000 பங்குகளுக்கு விற்பனை உரிமை வழங்கப்பட்டதாகவும், அதனை அச்சமயத்தில் தான் பயன்படுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்தார். அதன்பின் அந்த வாய்ப்பை கடந்த ஏப்ரல், 2013-ஆம் ஆண்டில் பயன்படுத்தியதாகவும், அதற்கு பதிலாக 90,000 அமெரிக்க டாலர்களை அந்நிறுவனத்துக்கு வழங்கியதாக ஒப்புக்கொண்டார்.

பயோசென்சார்ஸ் இண்டர்நேஷனல் குரூப் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை கடந்த ஏப்ரல், 2016-ல் விற்றுவிட்டதாக மருத்துவர் அசோக், இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு தெரிவித்தார். இந்த நிறுவனம், கடந்த மே 20, 2015-ல் சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச் செக்யூரிட்டிஸ் டிரேடிங் லிமிடெடில் பட்டியலாகும்போது அந்நிறுவனத்தின் பங்குகள் 0.371 அமெரிக்க டாலர்கள். மேலும், பங்குச்சந்தை தகவலின்படி, ஏப்ரல், 2013-ல் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.371 அமெரிக்க டாலர்கள். ஆக, பங்குச்சந்தை நிலவரப்படி 2,50,000 பங்குகளின் மதிப்பு 2,47,954 அமெரிக்க டாலர்கள் (ரூ.1.51 கோடி).

இதனை மருத்துவர் அசோக் ஒப்புக்கொண்டாலும், அந்நிறுவனத்தின் பங்கு ரூ.1.39 கோடி என கூறியிருப்பது முரணாக உள்ளது. முக்கியமாக, அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு பங்குகளை ரூ.1.03 கோடிக்கு விற்றிருக்கிறார். இதன்மூலம், ரூ. 54 லட்சம் லாபம் அடைந்திருக்கிறார். இதனை வரிதாக்கலின்போது முறையாக குறிப்பிட்டதாக மருத்துவர் அசோக் கூறியுள்ளார்.

அந்த நிறுவனம் பயோமேட்ரிக்ஸ் எனப்படும் புதுவிதமான ஸ்டெண்டை அறிமுகப்படுத்தியதாகவும், அதனை நோயாளிகளுக்கு 2012-ஆம் ஆண்டு வரை பரிந்துரைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

"நான் ஏப்ரல் 2013 முதல் ஆகஸ்ட் 2013 வரை, அந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்த நேரத்தில், ஏழு பயோமேட்ரிக்ஸ் ஸ்டெண்ட்ஸை மட்டுமே பயன்படுத்தினேன். ஆகஸ்ட்டு 2013 முதல் ஏப்ரல் 2016 வரை நில் பயோமெட்ரிக்ஸ் ஸ்டெண்ட் அல்லது பயோசென்சார் கருவியை நான் பயன்படுத்தினேன். இந்த கருவி குறித்து எந்த கல்வி நிறுவனங்களிலுல் உரை நிகழ்த்தவில்லை. தேவை ஏற்பட்டால், இதுகுறித்து அறிவியல் கூட்டங்களில் வெளிப்படையாக கூறுவேன். இந்த கருவியின் விற்பனை, விலை நிர்ணயித்தல் ஆகியவற்றில் என்னுடைய பங்கு இல்லை. நான் என்னை நாடி வரும் நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவத்தையே அளித்துள்ளேன்", என கூறினார்.

Paradise Papers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment