scorecardresearch

5 முறை முதல்வர்:  20 வயதில் பஞ்சாயத்து தலைவர்: பஞ்சாப் அரசியலை மாற்றியமைத்த பிரகாஷ் சிங் பாதல்

5 முறை பஞ்சாபின் முதல்வராக இருந்தவரும், அரசியலில் ஆளுமை வாய்ந்த நபருமான பிரகாஷ் சிங் பாதல் நேற்று மரணமடைந்தார். கிட்டதட்ட 70 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக செயல்பட்டார். அவருக்கு வயது 95 ஆகிறது.

பிரகாஷ் சிங் பாதல்

5 முறை பஞ்சாபின் முதல்வராக இருந்தவரும், அரசியலில் ஆளுமை வாய்ந்த நபருமான ’பிரகாஷ் சிங் பாதல்’ நேற்று மரணமடைந்தார். கிட்டதட்ட 70 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக செயல்பட்டார். அவருக்கு வயது 95 ஆகிறது.

இவரது அரசியல் பயணம், 20 வயதில் கிராம பஞ்சாயத்து தலைவராக தொடங்கியது. பாகிஸ்தானுடனான போர், இந்தியாவின் அவசர நிலை காலம், என்று பல நெருக்கடியான அரசியல் சூழலை சந்தித்தவர்.

இவர் பலமுறை சிறைக்கு சென்றுள்ளார். இந்தியாவின் அவசரைநிலை காலத்தில் அவர் சிறைக்கு சென்றுள்ளார். இதனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இவரை இந்தியாவின் ’நெல்சன் மண்டேலா’ என்று அவரை அழைத்துள்ளார். நெருக்கடியான நேரத்தில்கூட அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்ததில்லை.

40 வருடங்களாக அரசியல் ஆலோசகராக இருக்கும் ஹரிசரன் பயின்ஸ் கூறுகையில் ” குருநானக் தத்துவத்தில் ’இந்துஸ்தான்’ என்ற வார்த்தை முதலில் அங்குதான் பயன்படுத்தப்பட்டது என்று எனது அம்மா கூறுவதுபோல், பிரகாஷ் சிங் பாதல், இந்தியாவுடன் சீக்கியர்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. அவர்கள் பாதுகாவலர்கள் “ என்று அவர் நினைத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

1966ம் காலக்கட்டத்தில் மாற்று கருத்து நிலவினாலும், ஜன சங் கட்சியுடன் அவர் கூட்டணி வைத்திருந்தார். 1977ம் ஆண்டு, மொரார்ஜி தேசாய் அரசங்காத்தில், மத்திய ஆமைச்சராக பதவி வகித்தார்.

1997ம் ஆண்டு முதல் அவர் பாஜவுடன் கூட்டணி அமைத்தார். பஞ்சாப்பில் மதநல்லிணக்கம் ஏற்பட காரணமாக இருந்தவர். விவசயிகளுக்கு எதிராக சட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தியதால், இந்த கூட்டணி 2021ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 1996ம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் தலைமேற்ற என்.டி.ஏ அரசுக்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர் இவர்தான்.

பிரகாஷ் சிங் பாதல், ஷிரொமனி அகலி தால் என்பதை பஞ்சாப் அரசியல் கட்சியாக மாற்றினார். பஞ்சாபி,பஞ்சாபியத் ( Punjabi and Punjabiyat) என்ற அரசியல் முழக்கத்தை உருவாக்கினார். இதனால், அவரது அரசியல் கட்சி அதிக இந்து வேட்பாளர்களை பெற்றது. 2007 மற்றும் 2012 என்று இரண்டு முறை ஷிரொமனி அகலி தால் கட்சி வெற்றிபெற்றது. இதற்கு முக்கிய காரணமாக விளங்கியது இவர்தான். பஞ்சாப் அரசியலில் இந்த இரண்டு வெற்றியும் நிகழாது என்று கருதப்பட்டபோதும், அவர் அதை நிகழ்த்திக்காட்டினார்.

இந்நிலையில் இவர் தொடர்பாக நினைவுகளை பகிருந்து கொண்ட மூத்த பத்திரிக்கையாளர் கூறுகையில் “ சிறிய முயற்சிகளால் நாங்கள் அனைவரும் ஒரு அரசாங்கத்தை அமைத்துவிட்டோம் என்று அவர் கூறினார்” என்று மூத்த பத்திரிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு அரசியல் தலைவர்களுடன் அவர் நட்பான உறவை வைத்திருந்தார் என்று பிரதமர் மோடி இவரை பாராட்டியுள்ளார்.

துணை பிரதமராக இருந்த செளதிரி தேவி லால்-யுடன் இவர் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். அவரது குடும்பத்துடனும் நெருக்கமான நட்பு கொண்டவர். இவரும் தங்களது தலைப்பாகையை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு நட்பு கொண்டவர்கள்.

கீராம பஞ்சாத்து தலைவராக 20 வயதில் அரசியல் பயணத்தை தொடங்கியவர்.  25 வயதில் எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்பட்டார். மற்றும் 43 வயதில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். நாட்டிலேயே இளம் வயதில் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவரும், முதல்வராக தேர்வு செய்யப்பட்டவரும் இவர்தான் .  தனது 94 வயதில் விதான் சபா தேர்தலில் போட்டியிட்டு வரலாற்று சாதனை படைத்தார்.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டபோதும் அவர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் இமாலய வெற்றியால், அவர் தோல்வியை தழுவினார். இருந்தும் அவர் அதை ஏற்றுக்கொண்டார்.

மிகவும் எளிமையான முதல்வரக இருந்ததால்தான் அவர் 5 முறை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். மக்களை எளிதில் அணுகக்கூடிய முதல்வராக அவர் இருந்துள்ளார். அவர் பஞ்சாப் முழுவதும் சுற்றியபோதும், மற்ற அரசியல் தலைவர்கள் போல் நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கியதில்லை. அவரது கட்சியில் தொண்டர்களுடன்-தான் அவர் எப்போதும் தங்குவார்.

அவரது கடைசி நேர்காணலில், தன்னைபற்றி அவர் நினைத்து பெருமை படும் விஷத்தை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். “ அரசு அதிகாரிகளை என்னுடன் அழைத்து சென்று மக்களை சந்திப்பேன். மக்களின் வீட்டிற்கே அரசை கொண்டு சென்றுள்ளேன். மேலும் எதிர்பார்க்காத மாற்றத்தை நிகழ்த்திகாட்டியிருக்கிறேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

இளம் துணை ஆணையர் அவர் கூறித்து கூறிய போது “பத்திரிக்கையில் வெளியான முக்கிய பிரச்சனைகள் குறித்து, காலையிலேயே அவர் தொலைபேசியில் அழைத்து பேசுவார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மும்பையில் உள்ள பத்திக்கையின் ஆசிரியர், 2022ம் தேர்தலின் போது அவருடன் பயணித்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் சிங் பாதல் பற்றி அவர் குறிப்பிடுகையில் “ அகலி தால் கட்சியின் தொண்டர் ஒருவர், கட்சியின் கொடியுடன் வேகமாக இருசக்கர வாகனத்தில், கடந்து செல்வதை பிரகாஷ் சிங் பாதல் பார்த்துள்ளார். பேட்டியளித்து கொண்டிருந்த அவர், உடனே அவரின் உதவியாளரை அழைத்து, அவர்களை யார் வரச்சொன்னார்கள் என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக காரணத்தை நான் கேட்டபோது, அவர்கள் செய்வது ஆபத்தான விஷயம் என்பதால் அவர்களை தடுத்தேன்” என்று அவர் கூறினார். மேலும் அவர் மிகவும் அக்கரை கொண்ட மனிதர் என்றும் அவர் குறிப்பிடுள்ளார்.

மேலும் இவர் திறமையான அரசியல்வாதியும்கூட, இவருக்கு எதிராக சவால்விட்ட குர்சரண் சிங் தோஹ்ரா, பல்தேவ் சிங் உள்ளட்ட அரசியல் தலைவர்களை, சமர்த்தியமாக அரசியலில் இருந்து ஓரம்கட்டினார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Parkash singh badal the great reconciler of punjab is no more