/tamil-ie/media/media_files/uploads/2018/09/petroleum-l.jpg)
Petrol Diesel price Drops For Sixth Consecutive Days
பெட்ரோல், டீசலின் விலை இன்றோடு சேர்த்து தொடர்ந்து ஆறாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது. அக்டோபர் 1 ம் தேதி 15 காசுகள் உயர்வை சந்தித்து 77.51 என்ற கணக்கில் விற்கப்பட்ட பெட்ரோல் விலை அடுத்து வந்த நாட்களில் படிப்படியாய் இறங்கத் தொடங்கியது. நேற்று , ரூ. 76.62 என்ற கணக்கில் விற்கப்பட்ட பெட்ரோலின் விலை 19 காசுகள் குறைந்து ஒரு லிட்டருக்கு ரூ. 76. 43 என்ற கணக்கில் சென்னையில் விற்பனையாகி வருகிறது.
இந்தியா பெரும்பாலும் பெட்ரோல், டீசலை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துவருகிறது . கச்சா எண்ணெய் உள்நாட்டு உற்பத்தியில் சொல்லும் படி இல்லை . ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் அசாதரன சூழல்கள் நடந்து வருகிறது. உதாரணமாக, சவுதி அரேபிய- ஏமன் போரின் விளைவாக சில நாட்களுக்கு முன் சவுதி அரேபியாவின் எண்ணெய் கிடங்குகளில் ட்ரோன்( ஆளில்லா விமானம்) மூலம் ஏமன் படைகள் தாக்குதல் நடத்தின. இதனால் 50 சதாவீத எண்ணெய் உற்பத்தியை சவுதி நிறுத்தியது. கச்சா எண்ணெயின் உற்பத்தி குறைவதால், உலகளவில் விலையும் சற்று அதிகரித்தது. இந்தியாவிலும் பெட்ரோல், டீசளின் விலை ரூ. 100 யைத் தொடும் என்று பயனர்கள் பயந்துவந்தனர்
இதற்கிடையில் , சவுதி அரேபியாவின் பெரிய வாடிக்கையாளரான இந்தியாவிடம், உற்பத்தி குறைந்தாலும் வழக்கம் போல் சீரான அளவில் கச்சா எண்ணையைத் தர முயற்சிப்போம் என்ற வாக்குறுதியையும் சவுதி கொடுத்திருந்தது.
எனவே, அக்டோபர் 2 முதல் தொடர்ச்சியாக ஆறு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சரிவோடு தான் உள்ளன. விழாக்காலம் என்பதால் இந்த விலை குறைப்பு பயனர்களிடம் சற்று வரவேற்பையும் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.