Advertisment

பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசுகள் ஏலம்: காசி விஸ்வநாதர் கோயில் மாதிரி சின்னத்தை பெற போட்டி

பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசுகள் ஏலம் விடப்பட்டுள்ளது. இதில், உ.பி முதல்வர் அளித்த மரத்தால் செய்யப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் மாதிரி நினைவு சின்னத்தை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

author-image
sangavi ramasamy
New Update
பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசுகள் ஏலம்: காசி விஸ்வநாதர் கோயில் மாதிரி சின்னத்தை பெற போட்டி

பிரதமர் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, வேறு மாநிலங்கள் செல்லும் போது, வெளிநாடு செல்லும் போது பல்வேறு தலைவர்களால் நினைவு பரிசு வழங்கப்படுகிறது. தலைவர்கள், பிரபலங்கள் எனப் பல்வேறு நபர்களிடமிருந்து பரிசு பொருட்கள், நினைவு பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை பிரதமர் அலுவலகம் ஏலம் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

Advertisment

அந்தவகையில் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமருக்கு வழங்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்ட பொருட்கள் pmmementos.gov.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் ஏலம் தொடங்கியது. குறைந்தபட்ச ஏலத் தொகை தொடங்கி அதிகப்பட்டமாக ரூ.49 லட்சம் வரை பொருட்கள் ஏலம் கேட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மோடி உத்தரப் பிரதேச மாநிலம் சென்று போது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்கிய மரத்தால் செய்யப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் மாதிரி நினைவு சின்னத்தை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவுகிறது.

ரூ.16,200 ஆரம்ப விலை கூறப்பட்ட நிலையில், அதிகபட்சமாக ரூ.49.61 லட்சத்திற்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. 282 முறை ஏலம் கேட்கப்பட்டது.

இரண்டாவதாக, இந்தாண்டு பிரேசிலில் நடந்த காது கேளாதோர் ஒலிம்பிக்கில் பங்கேற்ற 65 பேர் கொண்ட இந்திய அணி கையெழுத்திட்ட டி-ஷர்ட் அதிக தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டது. 222 ஏலங்களுடன் 47.69 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது.

தாமஸ் கோப்பை தங்கப் பதக்கம் வென்ற கே.ஸ்ரீகாந்த் கையெழுத்திட்ட பேட்மிண்டன் பேட் ரூ 48.2 லட்சத்திற்கு ஏலம் கோரப்பட்டுள்ளது. இரண்டு பொருட்களின் அடிப்படை விலை ரூ.5 லட்சம் ஆகும். நேற்று(செப்டம்பர் 2) மாலை 5 மணியுடன் ஏலம் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

25 விளையாட்டு நினைவுச் சின்னங்கள் ரூ. 5 லட்சம் தொடங்க விலையாக நிர்ணயிக்கப்பட்டது, ரூ.10 லட்சம் முதல் ரூ.47 லட்சம் வரை ஏலம் கேட்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற குத்துச்சண்டை வீரர்கள் பிரதமருக்கு வழங்கிய குத்துச்சண்டை கையுறை 181 ஏலங்களைப் பெற்று, ரூ. 44.13 லட்சத்திற்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது.

சென்னை செஸ் ஒலிம்பியாட் நினைவு பரிசு 125 ஏலங்களுடன் ரூ.19.65 லட்சத்திற்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது.

இவை தவிர பிரதமருக்கு பல்வேறு நபர்கள் வழங்கிய பரிசு பொருட்கள், நினைவு சின்னங்கள் அங்கவஸ்திரம், ஓவியங்கள், சிற்பங்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் நாட்டுப்புற கலைப்பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment