கோவில் கட்டுவதற்கு முன்னர் முதலில் கழிப்பறையை கட்டுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் உரை நிகழ்தியதன் 125-வது ஆண்டுதினம் மற்றும் தீனதயாள் உபாத்யாவின் நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு டெல்லியில் மாணவர் மாநாடு நடைபெற்றது. யங் இந்தியா, நியூ இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் நேரத்திர மோடி உரை நிகழ்த்தினார். மோடியின் இந்த உரையை நேரடியாக கேட்க நாடு முழுவதும் உள்ள ஏராளமான பள்ளி, கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதமர் நேரந்திரமோடி பேசும்போது: வந்தே மாதரம், வந்தே மாதரம் என பலர் குரல் எழுப்புவதை கேட்கமுடிகிறது. இதன் மூலம் இந்திய மக்களுக்கு நாட்டின் மீது அதிக அளவு தேசப்பற்று இருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், வந்தே மாதரம் என கூறுவற்கு நாமக்கு உரிமை இருக்கிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். முதலில், வந்தே மாதரம் என்பதை கூறுவதற்காக உரிமையை நாம் பெற வேண்டும் என்றால், நாட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
பொது இடங்களில் குப்பைகளை போடாமல் இருங்கள். பின்னர் வந்தே மாதரம் என முழக்கமிடலாம். கோவில் கட்டுவதற்கு முன்னதாக இளைஞர்கள் முதலில் கழிப்பறையை கட்ட வேண்டும். சுகாரமான இந்தியாவை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். இந்தியாவில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பை உருவாக்குபர்களாக இருக்க வேண்டுமே தவிர, வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது.
விவேகானந்தர் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்கும் வழிகாட்டியாக திகழ்கிறார். தேசப்பற்றின் முக்கிய நோக்கமே நாட்டிற்காக உழைப்பது தான். உலகின் நிலவும் பிரச்சனைகளுக்கு ஆசியாவில் இருந்தே தீர்வு காணப்படும் என்று விகேகானந்தர் குறிப்பிட்டிருந்தார்.
மாணவர்கள் சுத்தத்தை முதன்மையாக வைத்தே பல்கலைக்கழகத்தில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று நரேந்திர மோடி பேசினார்.