PM Modi in Ladakh : இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று காலை லே, லடாக்கிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். அங்கு அடுத்து இந்தியா மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், ராணுவ வீரர்களுக்கு ஊக்கமளித்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கே பதிவிடுகிறோம்.
இந்திய – சீன நாடுகளுக்கிடையே எல்லை விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடி, லடாக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சில வாரங்களுக்கு முன்னர், லடாக்கின் கிழக்கு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அதன் பிறகு இன்று லடாக்கில் ஆய்வு மேற்கொண்டார் பிரதமர் மோடி. அவருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோர் உடன் சென்றனர்.
பிரதமர் மோடி இன்று அதிகாலை லே பகுதியில் உள்ள நிமு பகுதிக்கு சென்றார். நிமு பகுதியானது, 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளதுடன், கடினமான நிலப்பகுதியை கொண்டது.
லடாக்கின் நிமு பகுதி, கடல்மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி மேலே உள்ளது. இந்த பகுதி, இந்துஸ் நதி, ஜன்ஸ்கார் மலைப்பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”