scorecardresearch

பிரதமர் பாதுகாப்பு மீறல்: பஞ்சாப், மத்திய அரசுகள் தனியாக விசாரணைக்கு உத்தரவு

உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க புது டெல்லியில் தனி குழுவை அமைத்துள்ளது. அமைச்சரவை செயலகத்தில் உள்ள பாதுகாப்பு செயலாளர் சுதிர் குமார் சக்சேனா தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க புது டெல்லியில் தனி குழுவை அமைத்துள்ளது. அமைச்சரவை செயலகத்தில் உள்ள பாதுகாப்பு செயலாளர் சுதிர் குமார் சக்சேனா தலைமையிலான குழுவில், உளவுத் துறை இணை இயக்குனர் பல்பீர் சிங் மற்றும் எஸ்பிஜி ஐஜி எஸ் சுரேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

நேற்று முன்தினம், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மேம்பாலத்தில் 15-20 நிமிடங்கள் பிரதமர் சிக்கித் தவித்த பாதுகாப்பு மீறல் காரணமாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் வியாழக்கிழமை இந்த சம்பவம் குறித்து விசாரிக்க இரண்டு உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்து மூன்று நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

புதுடில்லியில், பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க, உள்துறை அமைச்சகம் தனி குழுவை அமைத்துள்ளது. அமைச்சரவை செயலகத்தில் உள்ள பாதுகாப்பு செயலாளர் சுதிர் குமார் சக்சேனா தலைமையிலான குழுவில், உளவுத் துறை இணை இயக்குனர் பல்பீர் சிங் மற்றும் எஸ்பிஜி ஐஜி எஸ் சுரேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மத்திய அரசும், பஞ்சாப் மாநில அரசும் இணையாக தனித்தனியாக விசாரணைகளை அறிவித்துள்ள நிலையில், பிரதமரின் பாதுகாப்பு மீறல் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்த பிறகு, அரசாங்கம் பெரிய மற்றும் கடினமான முடிவுகளை எடுக்கும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். மேலும், இது சாதராண சிறிய பாதுகாப்பு குறைபாடு அல்ல, பெரிய குறைபாடு” என்று அனுராக் தாக்கூர் கூறினார்.

ஹுசைனிவாலா எல்லைக்கு செல்லும் சாலையில் பிரதமரின் கான்வாய் தடுத்த அடையாளம் தெரியாத போராட்டக்காரர்கள் மீது பஞ்சாப் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, ஆஜ் தக் டிவி சேனலில் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி மூலம் ஒரு செய்தியைத் தெரிவித்திருந்தார். “மோடி நாட்டின் பிரதமர், அவரது பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அது குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதியின் கீழ் ஆணையம் அமைத்துள்ளேன்” என்று சரண்ஜித் சிங் சன்னி கூறினார்.

ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி மெஹ்தாப் சிங் கில் மற்றும் உள்துறை செயலர் அனுராக் வர்மா ஆகியோர் அடங்கிய இரண்டு உறுப்பினர்கல் கொண்ட குழுவை மூன்று நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நீதிபதி கில், பிரதமர் செல்லும் வழித்தடங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது, யார் அனைவரும் அவர்களை நிர்வகிப்பது என்று கேள்வித்தாளை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்புவதன் மூலம் விசாரணை செயல்முறையைத் தொடங்கினார். அவர் எஸ்பிஜி புளூ புக்கையும் பார்ப்பார் என்று வட்டாரங்கள் தெரிவித்தது.

நீதிபதி கில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “நான் முதலில் இந்த விஷயத்தை விசாரிப்பேன், பின்னர்தான் எதுவாக இருந்தாலும் கூறுவேன்.” என்று கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை அழைத்து சுமார் 20 நிமிடம் இந்த விவகாரம் தொடர்பாக அவருடன் விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று முன்தினம் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை என்றும், இது பிரதமரை நிறுத்திய விவசாயிகளின் போராட்டம் மட்டுமே என்று முதல்வர் சன்னி கூறியுள்ளார்.

புது டெல்லியில் உள்துறை அமைச்சகம், “05.01.2022 அன்று பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூருக்குச் சென்றபோது, வி.வி.ஐ.பி.யின் கடுமையான பாதுகாப்பு அபாயத்திற்கு வழிவகுத்த ​​பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட கடுமையான குறைபாடுகள் குறித்தும் விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது” என்று கூறியுள்ளது. .இந்த குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

பிரதமரின் வருகைக்கு முன் தயாரிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு இணைப்பு அறிக்கையை இந்தக் குழு ஆய்வு செய்து, பிரதமர் வருகையின்போது அவரது பாதுகாப்பிற்குப் பொறுப்பானவர்களால் நெறிமுறைகள் மீறப்பட்டதா என்று பார்க்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமரின் பாதுகாப்புக்கு பொறுப்பான அனைவரும், எஸ்பிஜி மற்றும் மாநில காவல்துறையில் இருந்து விசாரிக்கப்படுவார்கள். மேலும், எஸ்பிஜி மற்றும் உள்ளூர் காவல்துறையினருக்கு இடையிலான அனைத்து தகவல்தொடர்புகளும் ஆய்வு செய்யப்பட்டு, தோல்விக்கான பொறுப்பை சரிசெய்வதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் தாக்கூர் கூறியதாவது: சிலர் உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளனர். அவர்கள் அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உள்துறை அமைச்சகமும் நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. தகவல்களைச் சேகரித்த பிறகு, பெரிய மற்றும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தால், அவர்கள் அதை செய்வார்கள். இதுபோன்ற விதிமீறல் ஏற்படும் போது, ​​என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அனுராக் தாக்கூர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Pm modi security breach punjab centre order separate probes fir against protesters