இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியா 400 மில்லியன் டாலர் கடன் – பிரதமர் மோடி அறிவிப்பு

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் உள்கட்டமைப்பு பொருளாதாரத்தை வலுப்படுத்த வெள்ளிக்கிழமை 400 மில்லியன் டாலரை(இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2,868 கோடி ரூபாய்) அந்நாட்டிற்கு கடனாக வழங்குவதாக அறிவித்தார்.

By: Updated: November 29, 2019, 07:45:38 PM

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் உள்கட்டமைப்பு பொருளாதாரத்தை வலுப்படுத்த வெள்ளிக்கிழமை 400 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2,868 கோடி) அந்நாட்டிற்கு கடனாக வழங்குவதாக அறிவித்தார். மேலும், இலங்கை தீவிரவாதத்தை எதிர்த்து போராட அந்நாட்டிற்கு உதவுவதற்காக 50 மில்லியன் டாலர் கூடுதலாக அறிவித்தார்.

ராஜபக்சவுடன் ஊடகங்களிடம் பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளும் ஒரு வலுவான பிணைப்பை பகிர்ந்து கொள்கின்றன. மேலும், ஒரு வலுவான இலங்கையானது இந்தியாவின் நலனில் மட்டுமல்ல, முழு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் உள்ளது.

ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அகிற்ச்சி..

உங்களுக்கு (ராஜபக்சவுக்கு) வழங்கப்பட்ட ஆணை ஒரு வலுவான நாட்டிற்கான இலங்கை மக்களின் விருப்பங்களின் வெளிப்பாடாகும்.   ஒரு வலுவான இலங்கையானது இந்தியாவின் நலனில் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் உள்ளது”என்று மோடி கூறினார். மேலும், “இலங்கையும் இந்தியாவும் ஒரு வலுவான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. நம்முடைய முதல் அண்டை நாடுகள் கொள்கையின் கீழ் இலங்கையுடனான நம்முடைய உறவுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.” என்று கூறினார்.

இந்திய வீட்டுவசதி திட்டத்தின் கீழ், இலங்கையில் 46,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு 14,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. சூரியசக்தி திட்டங்களுக்கு மேலும் 100 மில்லியன் டாலர் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மோடி கூறினார்.

“இலங்கையில் நல்லிணக்கம் குறித்த எங்கள் கருத்துக்களை நாங்கள் பரிமாறிக்கொண்டோம். இலங்கை அதிபர் ராஜபக்ச, இன நல்லிணக்கம் குறித்த தனது அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் கண்ணோட்டத்தைப் பற்றி என்னிடம் கூறினார். சமத்துவம், நீதி, அமைதி மற்றும் தமிழர்களின் மரியாதை ஆகிய அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற இலங்கை அரசு நல்லிணக்க நடைமுறைகளை முன்னெடுக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று பிரதமர் மோடி இந்த மாநாட்டின் போது கூறினார்.

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள கோத்தபய ராஜபக்ச, இந்தியா – இலங்கை இருதரப்பு உறவை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பேன் என்றார். பாதுகாப்பு மற்றும் மக்களின் ஒட்டுமொத்த நலன் தொடர்பான பிரச்சினைகளில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

“நாங்கள் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். பேச்சுவார்த்தைகளில் எங்களுடைய கவனம் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி இருந்தது.” என்று கூட்டாக பேசியபோது தெரிவித்தனர். “நான் அதிபராக இருக்கும் காலத்தில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மிக உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். நமக்கு இடையே வரலாற்று ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நீண்டகால உறவு உள்ளது.” என்றும் கோத்தபய ராஜபக்ச கூறினார்.

தொடர்ந்து பேசிய இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியாவுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

கோத்தபய ராஜபக்ச 10 நாட்களுக்கு முன்பு இலங்கை அதிபராக பதவியேற்ற பின்னர், இது அவருடைய முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணம். அவர் வியாழக்கிழமை இந்தியா வந்தார்.

வெள்ளிக்கிழமை காலை குடியரசுத் தலைவர் மாளிகையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி அவரை வரவேற்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Pm modi sri lankan president gotabaya rajapaksa bilateral talks on security terrorism india offers 400 dollars

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X