மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே இன்று காலை உரையாற்றவுள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்றும் மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அவரது உரையை வானொலி மூலமும், செல்போன் மூலமும் கேட்கலாம்.
அதன்படி, இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி, வானொலி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மேலும், தனது உரையை கேட்குமாறு தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.
இந்தியாவில் எப்பகுதியிலிருந்தும் '1922' என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டாலும், அழைப்பு ஏற்கப்பட்டு பின் துண்டிக்கப்படும். பின் பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசும் போது செல்போனுக்கு வரும் அழைப்பை ஏற்றால் பிரதமரின் உரையை கேட்கலாம் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி. வரி, பீகார் அரசியல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பயணம், ஜி 20 மாநாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.