பாலஸ்தீன நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற புதிய புகழை பெறுகிறார் நரேந்திர மோடி.
மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி, பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட், ஓமன் நாடுகளுக்கு செல்கிறார். வரும் 10 ஆம் தேதி மோடியின் அரசு பயண்ம் தொடங்குகிறது. கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட மோடி, அதன் அண்டை நாடான பாலஸ்தீனத்துக்கு செல்லாமல் இருந்தது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்நிலையில், இம்முறை மோடி கண்டிப்பாக பாலஸ்தீன நாட்டுக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன நாட்டின் அதிபர் மக்மூத் அப்பாசை சந்தித்து பேசிய பின்பு, இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுகாதாரம், தொழில்நுட்பம், சுற்றுலா, இளைஞர் நலம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இரு நாட்டு தலைவர்கள் கலந்துரையாடுகின்றனர். அதிபர் மக்மூத் அப்பாஸ் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய சிறப்பு விருந்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார். அத்துடன், அந்நாட்டில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியமான அரபாத் அருங்காட்சியத்தையும் மோடி சுற்றிப்பார்கிறார்.
மோடியின் இந்த மூன்று நாள் அரசு முறை பயணம் குறித்து, மத்திய வெளியுறவு துறை அமைச்சகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மோடியின் இந்த பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுவதாக அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன் பின்பு இரண்டாவது முறையாக மோடி, ஐக்கிய அரபு நாடு எமிரேட்டுக்கு செல்கிறார். எமிரோட்ரோவின் அதிபர் ஷேக் கலிபா பின் சயத் அல் நஹ்யானை சந்திக்கிறார். அதன் பின்பு, சிறப்பு விருந்தினராக 6-வது உலக அரசுகள் உச்சி மாநாட்டில் மோடி உரையாற்றுகிறார். இறுதி நாளன்று மோடி ஓமன் நாட்டிற்கு சென்று, அங்குள்ள சமூகத்தினரின் மத்தியில் உரையாற்றி, தனக்து பயணத்தை நிறைவு செய்கிறார்.