கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி அளித்த சிறந்த பரிசு; தாத்தாவின் நினைவாக செஸ் செட்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வியாழக்கிமை அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடனான சந்திப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என்று பிரதமர் மோடி கூறினார்.

PM Modi gives gift to Kamala Harris, PM Narednra Modi, Vice President Kamala Harris, PM Narendra Modi visits America, கமலா ஹாரிஸ், பிரதமர் மோடி, PM Modi gives gift to Kamala Harris, கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு, தாத்தாவின் நினைவாக செஸ் செட், PM Modi, Kamala Harris, USA, Quad summit, Joe Biden, America

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வியாழக்கிமை அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடனான சந்திப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என்று பிரதமர் மோடி கூறினார். அப்போது அவர்கள் இந்திய-அமெரிக்க ராஜதந்திர கூட்டுறவை மேலும் உறுதியாக்க முடிவு செய்தனர். இந்தோ-பசிபிக் பகுதியில், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்கள் உட்பட பொதுவான நலன்கள், உலகளாவிய பிரச்சினைகள் பற்றி விவாதித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு முதல் சந்திப்பின்போது இந்திய அரசாங்கத்தில் மூத்த அதிகாரியாக இருந்த அவருடைய தாத்தா தொடர்பான பழைய நினைவின் நகலாக, ஒரு மரக் கைவினைச் சட்டத்தில் செய்யப்பட்ட ‘மீனாகரி’ சதுரங்கப் பலகை பொருட்களை (Chess set)பரிசளித்தார் என்று அரசாங்க வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுடனான சந்திப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என்று பிரதமர் மோடி கூறினார். அப்போது அவர்கள் இந்திய-அமெரிக்க ராஜதந்திர கூட்டுறவு மேலும் உறுதியாக்க முடிவு செய்தனர். இந்தோ-பசிபிக் பகுதியில் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்கள் உட்பட பொதுவான நலன்களில் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.

கமலா ஹாரிஸுடன் மிகவும் வெற்றிகரமாக இருதரப்பு சந்திப்பை பிரதமர் மோடி நடத்தினார் என்று குறிப்பிட்ட வட்டாரங்கள், அவர் அமெரிக்க துணை அதிபருக்கு மிகச் சிறந்த பரிசுகளை வழங்கினார் என்று தெரிவித்தனர்.

மிகவும் நெகிழ்ச்சியான வகையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு அவரது தாத்தா, ஸ்ரீ பி.வி.கோபாலன் தொடர்பான பழைய நினைவின் நகலை மரத்தால் ஆன கைவினைச் சட்டத்தில் பிரதமர் மோடி வழங்கினார். அவருடைய தாத்தா பி.வி. கோபாலன் மூத்த அரசாங்க அதிகாரியாக பல்வேறு பதவிகளில் பணியாற்றினார் என்று அரசாங்க வட்டாரம் தெரிவித்தது.

பிரதமர் மோடி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு குலாபி மீனாகரி ‘செஸ் செட்’டை பரிசளித்தார். ‘குலாபி மீனாகரி’ கைவினை உலகின் பழமையான நகரங்களில் ஒன்றான பிரதமரின் மக்களவைத் தொகுதியான வாரணாசியுடன் நெருங்கிய தொடர்புடையது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த குறிப்பிட்ட சதுரங்கத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு பகுதியும் குறிப்பிடத்தக்க வகையில் கைவினைப்பொருட்களைக் கொண்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பிரகாசமான வண்ணங்கள் வாரணாசியின் அழகை பிரதிபலிக்கின்றன என்றனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு ‘வெள்ளியில் குலாபி மீனாகரி கப்பல்’ பரிசாக வழங்கப்பட்ட நிலையில், ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகாவுக்கு சந்தன புத்தர் சிலையை பரிசளித்தார்.

மோரிசனுக்கு பரிசாக வழங்கப்பட்ட கப்பலும் கைவினைப்பொருட்களில் வாரணாசியின் கலைத் தன்மை பிரகாசமாக பிரதிபலிக்கிறது.

கமலா ஹாரிஸை சந்தித்ததோடு, பிரதமர் மோடி வியாழக்கிழமை ஜப்பான் பிரதமர் சுகா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசனுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ பயணமாக வாஷிங்டனுக்கு புதன்கிழமை வந்த பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்து நியூயார்க்கில் முதல் நபராக குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, 76வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm narendra modi gives gift to kamala harris

Next Story
டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு; ரவுடி கோகி உள்பட 3 பேர் சுட்டுக் கொலைGangster Gogi dead, gangster gun fire in delhi rohini court, delhi, gangster gogi, tillu, sunil, gangster gun fire in court, delhi, gangster gogi 2 from rival gang shot dead, Rohini court in Delhi, டெல்லி, ரோகிணி நிதிமன்றத்தில் ரவுடி கோகி சுட்டுக் கொலை, 2 பேர் சுட்டுக் கொலை, நீதிமன்றத்திற்குள் ரவுடிகள் துப்பாக்கிச்சூடு, ரோகிணி நிதிமன்றம் டெல்லி, gangster, going, delhi court, rohini court
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com