வீடியோ : பிரதமர் மோடி வாக்களித்த பிறகு ‘ரோடு ஷோ’ : தேர்தல் விதியை மீறியதாக காங்கிரஸ் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் வாக்களித்த பிறகு ‘ரோடு ஷோ’ நடத்தியதாகவும், இதன் மூலமாக தேர்தல் விதிமுறையை மீறியதாகவும் காங்கிரஸ் கண்டித்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் வாக்களித்த பிறகு ‘ரோடு ஷோ’ நடத்தியதாகவும், இதன் மூலமாக தேர்தல் விதிமுறையை மீறியதாகவும் காங்கிரஸ் கண்டித்திருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Narendra Modi, Gujarat Assembly Elections 2017, Polling, PM Narendra Modi Road Show on Election Day, Indian National Congress, BJP, P.Chidambaram, Randeep Singh Surjewala

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் வாக்களித்த பிறகு ‘ரோடு ஷோ’ நடத்தியதாகவும், இதன் மூலமாக தேர்தல் விதிமுறையை மீறியதாகவும் காங்கிரஸ் கண்டித்திருக்கிறது.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் சட்டமன்றத்திற்கு இன்று (14-ம் தேதி) இறுதிகட்டத் தேர்தல் நடந்தது. முதல் கட்டமாக 83 தொகுதிகளுக்கு கடந்த 9-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில், எஞ்சிய 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடந்தது குறிப்பிடத்தக்கது. வருகிற 18-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல 12.20 மணியளவில் சபர்மதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். அதன்பிறகு அவர் ஏராளமான பாஜக.வினருடன் அப்பகுதி சாலையில் பிரசாரம் செய்ததாக (ரோடு ஷோ) காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது.

Advertisment
Advertisements

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், ‘தேர்தல் நாளில் முழு அளவிலான ஒரு பிரசாரத்தை பிரதமர் மேற்கொண்டதாக’ குற்றம் சாட்டியிருக்கிறார். ‘தேர்தல் ஆணையம் அதன் பணியில் தூங்குவதாகவும்’ கண்டனம் தெரிவித்தார் ப.சிதம்பரம்.

‘தேர்தல் நாளில் பிரதமரின் ரோடு ஷோவுக்கு அனுமதித்தது, தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் ஆகும். இதுவும் தேர்தல் பிரசாரம்தான். தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது?’ என தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ப.சிதம்பரம்.

தொலைக்காட்சிகளில் வெளியாகியிருக்கும் படங்கள், பிரதமரும் பாஜக.வும் தேர்தல் நாளில் பிரசாரம்தான் செய்தார்கள் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அனைவருக்கும் சொல்லும். இப்படி விதிமுறைகள் மீறப்படுவது அதிர்ச்சி தருகிறது’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார் ப.சிதம்பரம்.

‘தொலைக்காட்சிகளில் வெளியான படங்களை பார்த்துவிட்டு மீடியா இதில் ஒரு முடிவுக்கு வரட்டும். இதைவிட வெளிப்படையான விதிமீறல் வேறு எதுவும் இருக்க முடியாது. மீடியா இதில் உண்மையின் பக்கம் நின்று, தேர்தல் ஆணையத்தை கண்டிக்க வேண்டும்’ என்றும் ப.சிதம்பரம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சர்ஜிவாலா கூறுகையில், ‘குஜராத்தில் தோல்வியை எதிர்கொள்ளும் பிரதமர் மோடி, விரக்தியில் கட்சிக் கொடிகளுடன் இந்த ரோடு ஷோவை நடத்தியிருக்கிறார். சுதந்திரமாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், ஒரு பொம்மையாக இருக்கிறது’ என கூறினார்.

‘இதே தேர்தல் ஆணையம் டெல்லியில் ராகுல் காந்தியின் பேட்டியை ஒளிபரப்பிய சேனல்கள் மற்றும் பிரசுரித்த செய்தித் தாள்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதில் இருந்து அதன் இரட்டை நிலையை புரிந்து கொள்ளலாம். அதேசமயம் சட்டத்தை மீறுவதற்கு பாஜகவுக்கும் மோடிக்கும் இலவச லைசன்ஸை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறது. அரசியல் சட்டமும், தேர்தல் விதிமுறைகளும் ஆளும்கட்சி முன்பும், பிரதமர் முன்பும் சரணாகதி ஆக்கப்படுகின்றன’ என சாடியிருக்கிறார் ரன்தீப் சிங் சர்ஜிவாலா.

இந்த விவகாரம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்வு குறித்து எழுத்துபூர்வமாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.

Gujarat Bjp P Chidambaram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: