வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில், வாகன இன்சூரன்ஸ் புதுப்பித்தலுக்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவானது நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்பட்சத்தில், ஏராளமான வாகனங்கள் மாசுக்கட்டுப்பாடு சான்றிதல் பெற்றுக்கொண்டால் மட்டுமே இன்சுரன்ஸ் புதுப்பிக்க முடியும். குறிப்பாக, 4 மெட்ரோ நகரங்கள் மற்றும் பெங்களூரு ஆகியவற்றில் மட்டும் சுமார் 2.6 கோடி வாகனங்கள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரையில் உள்ள வாகன கணக்கீட்டின்படி, டெல்லியில் 88 லட்சம் வாகனங்கள், பெங்களூருவில் 60.1 லட்சம் வாகனங்கள், சென்னையில் 44.7 லட்சம் வாகனங்கள், கொல்கத்தாவில் 20.7 லட்சம் வாகனங்கள் உள்ளனவாம்.
அதாவது, வாகன உரிமையாளர், தங்கள் வாகனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மாசுவை வெளியிடவில்லை என்தற்கான என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால் மட்டுமே இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என காப்பீடு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா என்பவர் 1985-ம் ஆண்டு மேற்கொண்ட பொதுநல மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர் தலைமை அமர்வு இதனை விசாரணை செய்தனர்.
அப்போது, இந்த பொதுநல வழக்கில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் வாதிடும்போது,
காற்று மாசு அடைவதில் வாகனங்களின் பங்களிப்பு என்பது அதிகாக இருந்து வருகிறது. காசு மாசினை தடுப்பது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, என்.சி.ஆர் பகுதிகளில் காற்றின் மாசுபாடு அதிகமாக உள்ளது என்றார்.
ஆனால், மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது. இன்சூரன்ஸ் புதுப்பிக்கும்போது மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயம் என்று அமல்படுத்துவது என்பது காற்று மாசுபடுதலை குறைப்பதற்கு சரியான தீர்வாக இருக்காது. மாசுக்கட்டுப்பாடு சான்றதழ் என்பது 2 -மாதங்கள் முதல் 1 வருட கால வேலிடிட்டி என வித்தியாசமான கால வரையரையில் வழங்கப்படுகிறது. ஆனால், இன்சூரன்ஸ் என்பது வருடத்திற்கு ஒரு ஆண்டு வேலிடிட்டி என வழங்கப்படுகிறது என்று தெரிவித்தது.
ஆனாலும், காற்றில் மாசின் அளவை குறைக்கும் வகையில், வாகன இன்சூரன்ஸ் புதுப்பித்தலுக்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயம் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நாட்டின் தலைநகரில் பெட்ரோல் நிலையங்களில் பியுஆர் மையங்களை, அதாவது pollution under control மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது.
தலைநகர் டெல்லியில் pollution under control மையங்கள் செயல்பாட்டில் இருப்பதை மத்திய அரசு 4 வாரத்திற்குள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.